புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014

இந்தியாவின் அழுத்தத்தால் அடிபணிந்தது பாகிஸ்தான் 
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்தப்பட்ட சதி திட்டம், இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
 
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் உளவு பார்க்கும் நோக்கத்தில், இந்தியாவுக்குள் நுழைந்ததாக இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் தமிழக பொலிசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். 
 
மலேசியாவில் இலங்கையைச் சேர்ந்த முகமது உசேன் முகமது சுலைமான் என்பவரின் கைது மூலம் இதில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பது அம்பலம் ஆனது. 
 
இந்த நிலையில் அவர்களிற்கு எதிராக சர்வதேச பொலிஸ் மூலம் இந்தியா ஏற்கனவே பிடிவிறாந்து பெற்றிருந்தது.
 
கைது செய்யப்பட்டவர்களிடம் மலேசியா மேற்கொண்டவிசாரணைகளின் போது அமெரிக்க இஸ்ரேல் தூதரகங்களை தாக்கவரும் 2 பேருக்கு உதவி செய்யுமாறு தனக்கு உத்தரவு வந்திருப்பதாகவும் 
 
அவர்களிற்காக ஜாகீர் உசேன் மேற்கண்ட தூதரகங்களை உளவு பார்ப்பது என்றும் தூதரகங்களை தாக்க மாலத்தீவில் இருந்து 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு சுலைமான் உதவி செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாக  அவர்  கூறினார்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிடிபட்ட ஜாகீர் உசேன் தன்னை உளவு வேலைக்கு அனுப்பியவர் பெயர் சுபைர் சித்திக் என்று தெரிவித்தார். 
 
சுபைர் சித்திக் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், விசா பிரிவு உயர் அதிகாரியாக செயற்பட்டு வருகின்றார்.
 
இந்த விவகாரம் சர்வதேச வடிவத்தை எட்டியதால் கடந்த மாதம் இந்த விசாரணை பொறுப்பை தமிழக பொலிசாரிடம்  இருந்து தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) ஏற்றுக்கொண்டது. 
 
என்.ஐ.ஏ. உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் மலேசியாவுக்கு சென்று சுலைமானிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை கேட்டறிந்தார்.
 
அப்போது தூதரகங்களை தாக்கும் சதித்திட்டம் பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.யின் கட்டளைப்படி தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. 
 
இதையடுத்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சுபைர் சித்திக்கை திரும்பப் பெறுமாறு இந்தியாஅழுத்தம் கொடுத்து வந்தது.
 
அதற்குப் பணிந்து பாகிஸ்தான் அரசு சுபைர் சித்திக்கை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின்படி என்.ஐ.ஏ.வின் முறையான வேண்டுகோள் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை அடைவதற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக பத்திரிகை தொடர்பு அதிகாரி முகமது தவுத் எதிஷம் கூறுகையில் "பணிக்காலம் முடிந்ததால்தான், சுபைர் சித்திக் பாகிஸ்தானுக்கு திரும்பி உள்ளார்" என்று கூறினார்.
http://id=257763289204596479#sthash.PQDQcBGe.dpuf

ad

ad