புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

அமெரிக்காவின் செய்தி இலங்கையின் நிலைமை தொடர்பில் தவறான பார்வையை ஏற்படுத்தியுள்ளது: வெளிவிவகார அமைச்சு
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ராஜதந்திர பாதுகாப்பு பிரிவு கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கிய பாதுகாப்பு தொடர்பான செய்தியானது இலங்கையின் தற்போதைய பரவலான நிலைமைகளில் தவறான பார்வையை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரம், அமைதியாக எதிர்ப்பை வெளியிடும் சுதந்திரம், ஜனநாயகத்தின் முக்கியமான மதிப்புகள் என்பன இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அமெரிக்க தூதரகத்தையும் ராஜதந்திரிகளையும், அமெரிக்க குடிமக்களையும் இலக்கு வைத்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க ராஜங்க திணைக்களம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு செய்தியில் கூறியுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் காஸா நிலைமைகளுக்கு தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அமைதியான முறையில் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய எதிரணி அரசியல் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுடன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் உறவுகளை வைத்துள்ளதுடன் அவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறது எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எந்த அடிப்படையில் மேற்குலக நாடுகளுக்கு எதிராக உணர்வுகள் அதிகரித்து வருகின்றது என்பது தெளிவாகவில்லை.
அமெரிக்க அரச அதிகாரிகள் அத்தகைய வளர்ச்சிக்கான மூல காரணத்தை ஆராய்வது தொடர்பி்ல் கவனம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் இருதரப்பு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் தடங்கல்களை தவிர்க்க முடியும்.
இலங்கை அரசாங்கம் ராஜதந்திரிகள், அவர்களின் குடும்பங்கள், சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பில் வியன்னா ஒப்பந்தத்திற்கு ஏற்ப சட்டங்களை அமுல்படுத்தியுள்ளதுடன் விடாமுயற்சியுடன் தொடர்ந்தும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இலங்கையில் கணிசமான அமெரிக்கர்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் பலர் ஆண்டு தோறும் இலங்கைக்கு வருகை தருகின்றனர். எனினும் அவர்களின் பாதுகாப்புக்கு சவால் ஏற்பட்டமை தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ad

ad