புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


வெள்ளைக் கொடிப் படகுப் போராட்டம் உறுதி மொழிகளை அடுத்து இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது!

இராமேஸ்வரத்திலிருந்து கச்சதீவு நோக்கி முன்னெடுக்கப்பட இருந்த வெள்ளைக்கொடிப் போராட்டம் இறுதி நேரத்தில்
பின்வாங்கப்பட்டுள்ளது.
மீனவர் அமைப்பினருக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த உறுதி மொழிகளைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


இலங்கை சிறைகளில் உள்ள 94 மீனவர்களையும், 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதிபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் வேர்க்கோடு தேவாலயத்திலிருந்து மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், சுவாமி பிரணவநந்தா, பங்கு தந்தை சகாயராஜ் ஆகியோர் தலைமையில் கச்சத்தீவில் வெள்ளைக் கொடியுடன் குடும்பத்தோடு தஞ்சமடையும் போராட்டத்தை ஊர்வலமாக சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் துவங்கினர்.

பாதுகாப்புக்காக ராமேசுவரத்தில் திரளான காவல்துறையினர் சனிக்கிழமை அதிகாலையிலேயே ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை தலைமையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மீனவர்களின் ஊர்வலம் கிளம்பிய சிறிது நேரத்தில், கச்சத் தீவுக்கு தஞ்சம் புகும் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது. மேலும் தடையை மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் , இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும் மீனவர் பிரச்சினைகள் குறித்து ராமேசுவரத்தில் இருந்து மீனவர் பிரதிநிதிகள் குழு டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மற்றும் அதிகாரிகளுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதிமொழியை ஏற்று மீனவர் சங்க பிரதிநிதிகள் கச்சத்தீவுக்கு தஞ்சம்புகும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். 
இதேநேரம் படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கும் வரை காலவரையற்ற போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக மீனவ அமைப்பின் பிரநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ad

ad