புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

மைக்கில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்த பாடகர்: சென்னையில் பரிதாபம்

கோயில் திருவிழா கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த பாடகர் ஒருவர் மைக்கில் மின்சாரம் தாக்கியதால் பலியாகியுள்ளார்.
ஆலந்தூரை அடுத்த மடுவின்கரை பெரிய பாளையத்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவில், கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
கச்சேரி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்ததால் மேடையும் மின்சார ஒயர்களும் ஈரமாக இருந்துள்ளன.
இந்நிலையில் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ரகுகுமார் திடீரென்று அலறியவாறு மேடையில் மயங்கி விழுந்துள்ளார்.
மேடையில் விளக்குகளுக்காக இணைக்கப்பட்டிருந்த ஒயரில் இருந்து ரகு பிடித்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, மயங்கிக்கிடந்த ரகுகுமாரை மருத்துவர் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதுபற்றி தகவலறிந்து வந்த புனிததோமையார் மலை பொலிஸார், ரகுகுமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
பெரிய பாளையத்தம்மன் கோயில் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த ரகுகுமார் பற்றி அவரது உறவினர் கூறும்போது, ரகுகுமார் பாடகியாக இருந்த புவனேஸ்வரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad