புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


யேர்மனி Stuttgart-Ludwisburg நகரில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி - 2014

யேர்மனியின் தென்மாநிலங்களில்   உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பாக யேர்மனி தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்டது. இப் போட்டிகளில் அந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களின் 378 மாணவமாணவிகள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின் யேர்மனியத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. பின் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு அதன் பின் தமிழாலயக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. பின் மாணவமாணவிகளின் அணிவகுப்பு மரியாதை தேசியக் கொடிகளுக்கு வழங்கப்பட்ட நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்கான பதக்கங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை சிறப்பாக அமைந்தது. பின் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
முதலாமிடத்தை München தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Stuttgart தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Kirheim Teck  தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.

ad

ad