காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னா-தீபிகா பல்லிகல் ஜோடி தங்க பதக்கம் வென்றது.
இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும், இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்