புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

இரான் விமானம் விழுந்து நொருங்கியது; 48 பேர் பலி:-
இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொருங்கியுள்ளது.48 பேர் பலி 

குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இரானின் அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.


உள்ளூரில் விமான சேவைகளை நடத்தும் செபாஹான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமே விழுந்துள்ளது.

கிழக்கு நகரான தபாஸ் நோக்கி தெஹ்ரானிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.

அண்மைய காலங்களில் இரானில் அடிக்கடி பல விமானங்கள் விழுந்து நொருங்கியுள்ளன.

இரான் விமானசேவையின் பழங்கால தொழிநுட்பமும் உரிய பராமரிப்பின்மையுமே இந்த சம்பவங்களுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

இரான் மீது மேற்குலகம் விதித்துள்ள தடைகள் காரணமாக புதிய விமானங்களையோ உதிரிப்பாகங்களையோ வாங்கமுடியாமல் அந்நாட்டு விமான நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.
  BBC

ad

ad