புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

தடை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பெயர்  பட்டியலில் இருந்து மூவரின் பெயர் மீளெடுப்பு 
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவோர் என கூறி பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து மூவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தல் மூலமாக வெளியிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இப்பெயர் பட்டியலில் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் 424 தமிழ் மக்கள் இலங்கையில் பயங்கர வாத நடவடிக்கைகளுக்களை முன்னெடுப்பதற்கு உதவியதாக கூறி அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
இதில் கே.துரைரட்ணம் (பிரான்ஸ்) ,கே.சுதர்சன் ( இந்தியா), த.பிரேமணி (இலங்கை) இவர்கள் மூவரின் பெயரும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு குறிப்பிட்டுள்ள நபர்கள் தங்களுடைய பெயரை பயங்கரவாத பெயர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதன் அடிப்படையிலேயே இவர்கள் மூவரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அவ் விண்ணப்பங்கள்  குறித்து ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ad

ad