புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

ம தி மு க , மத்திய அரசுக்காக  பேசுகின்ற  ஆதரவை விலக்குமா
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டது தமிழருவிமணியன். முதல் முதலில் கூட்டணியில் சேர்ந்தது ம.தி.மு.க., மற்ற கட்சிகளுக்கிடையே இழுபறி ஏற்பட்ட நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டணி பற்றி பகிரங்கமாக அறிவித்தார்.
 
தேர்தலில் இந்த கூட்டணி எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. பா.ஜனதாவும், பா.ம.க.வும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
 
எனவே, தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி நீடிக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வருங்காலத்தில் இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
 
கூட்டணி பற்றி முதலில் அறிவித்தது போல் மோடி அரசு பதவி ஏற்றது முதல் அரசின் கொள்கைகளை ம.தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது.
 
மோடி பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஸ அழைக்கப் பட்டதை வைகோ கடுமையாக எதிர்த்தார். இதனால் பதவி ஏற்பு விழாவையே புறக்கணித்தார்.
 
அதை தொடர்ந்து ராஜீவ் கொலையாளிகள் தூக்கு தண்டனை விவகாரம், இந்தி திணிப்பு, இலங்கை விவகாரம், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் விவகாரம், சமஸ்கிருத மொழி வார விழா, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரஷிய அதிபரை அழைத்தது, ரெயில்வே கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கியமான கொள்கை முடிவுகளை வைகோ கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தார். 
 
இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்.
 
மத்திய அரசு எடுத்து வரும் பெரும்பாலான கொள்கை முடிவுகள் அதிருப்தி அளிப்பதால் முரண்பட்ட கருத்துக்களோடு கூட்டணியில் நீடிக்க வேண்டாம் என்ற நிலைப் பாட்டை ம.தி.மு.க. எடுத்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
கூட்டணியில் இருந்து விலகும் முடிவுக்கு வைகோ வந்து விட்டதாகவும் அது பற்றி மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
அடுத்த மாதம் (செப்டம்பர்) 15–ந் தேதி ம.தி.மு.க. மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூந்த மல்லியில் நடக்கிறது. அந்த மாநாட்டில் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை வைகோ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad