புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு -விஜயகலா மகேஸ்வரன் 
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வும் இதனால் குற்றச் செயல்கள் உயர்வடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்
விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பர்டு அதிகரித்துள்ளமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகளவில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு போதைப் பொருள் பயன்பாடும், குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன.

அண்மையில் காரை நகரில் இரண்டு சிறுமிகள் கடற்படைச் சிப்பாய்களினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் இராணுவ முகாம்கள்; அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

காரை நகரில் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரேயொரு கடற்படை முகாம் இருந்ததாகவும், தற்போது பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

பாதுகாப்பு படையினர் அதிகளவில் முகாம்களை அமைப்பதனால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ad

ad