9 ஜூலை, 2013

இலங்கையிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் ஈராண்டு கால ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் 5.7.2013க்கு குறைந்த பட்சம் 3 மாத காலம் ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்திருக்க
வேண்டும். ஆரம்பக்கல்வி விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், சமயம், தமிழ் உள்ளிட்ட 22 பாடநெறிகளில் பயில விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தனியார் பாடசாலைகளில் கடமையாற்றும் விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 1 வருட கால ஆசிரிய சேவையையும் பிரிவேனா ஆசிரியர்கள் 2 வருட கால சேவையையும் பூர்த்தி செய்திருத்தல் காட்டாயமானதாகும்.
ஆசிரியர் ஒருவர் தமது அதிபரூடாக எதிர்வரும் 05.08.2013க்கு முன்னராக பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் கல்வி நிருவாகக் கிளை கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.கோடாபாய ஜயரத்ன அறிவித்துள்ளார். ஆசிரியர் கல்லூரியின் பயிற்சிக்காலத்தின் போது வேறு பாட நெறிகளைப் பின்பற்றுவதோ வேறு வெளிவாரிப்பரீட்சைகளுக்கு தோற்றுவதோ கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.