9 ஜூலை, 2013


மிளகாய் பொடி தூவி ரூ. 90 லட்சம் கொள்ளை
ஓடும் பஸ்சில் ரூ.90 லட்சம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 
திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுந்தரம், சேகர், போர்‌வெல் இயந்திர
உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள். இவர்கள் சேலத்தில் இருந்து பெங்களூரூ நோக்கி அரசு பஸ்சில் சென்றனர். பஸ், ஒசூர் அடுத்த மேல்மலை பகுதியில் வந்த போது பஸ்சில் இருந்த மூன்று பேர் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி ரூ. 90 லட்சத்தை கொள்ளையடித்து பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டனர். இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.