புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2013

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நண்பகல் 12 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய ராஜபக் ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பலரையும் சந்தித்து பேசவுள்ளார்.

இன்று திங்கட்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை அவர் சந்திக்கின்றார். நாளைக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் காலை உணவு அருந்தும் சிவ்சங்கர் மேனன் அதன் பின்னர் 13ஆவது திருத்தம் தொடர்பில் விரிவான பேச்சுக்களை ஜனாதிபதியுடன் நடத்தவுள்ளார். இதனைத தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும் சிவ்சங்கர் மேனன் அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சர் ஹக்கீமையும் சந்திக்கின்றார்.

இந்தச் சந்திப்புக்களில் 13ஆவது திருத்தச் சட்டம் தெடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் 13ஆவது திருத்தம் தொடர்பான விசேட செய்தியொன்றினை ஜனாதிபதியிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad