2 செப்., 2015

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன்

 பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால்,
தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றில் மக்கள் பலம் கொண்ட மூன்றாவது கட்சியாக தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு விளங்குவதாகவும், முதல் இரு கட்சிகளும் தேசிய அரசில் இணைவதனால் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்