புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2015

தேசிய அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது இலங்கை அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் : ஜனாதிபதி


நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே, தேசிய அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி  இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்

 ‘நல்லாட்சியின் கொள்கைப் பிரகடனமானது, தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மையமாக வைத்தே முன்னெடுத்துச் செல்லப்படும்.

குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கொள்கைகளுக்கு இணங்கவே அரசாங்கத்தின் கொள்கையும் வகுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, இனிமேலும் அவசியமா என்பது குறித்தும் அதன் பொறுப்புக்கள் குறித்தும் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும். வளங்களை சுரண்ட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், தராதரம் பாராமல் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிற்துறை நியமனங்களில் அரசியல் தலையீட்டிற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.

நாட்டின் தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் பொறுப்பினை, முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலநான் ஏற்றுக்கொள்வதோடு, இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் கடந்த அரசியல் வரலாற்றில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சிசெய்ததே தவிர தேசிய அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. யுத்த காலத்தில் இதன் அவசியம் காணப்பட்டது.

இன்று அதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, சமரசத்துடன் கூடிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வாய்ப்பு எமக்கு கிட்டியுள்ளது. இது, இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புது அத்தியாயமாகும்.

அத்துடன், தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படும் வகையிலான புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியம்.

புதிய நாட்டை கட்டியெழுப்பும் இந்த முயற்சியில் இலங்கையிலுள்ள அனைத்து புத்திஜீவிகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த புத்திஜீவிகளையும்

ad

ad