புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2015

எதிர்த்தரப்பு முன்வரிசையில் மஹிந்த ராஜபக் ஷ

எட்டாவது பாராளுமன்றத்தின் அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எதிர்க்கட்சியின்
முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
எம்.பிக்களுக்கு ஆசன ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருக்காத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்கு அருகில் உள்ள ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார்.
பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர் களுக்கு மாத்திரமே ஆசன ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆளும் தரப்பு முன்வரிசையில் கபீர் காசீம், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிசாட் பதியுதீன், அத்துரலிய ரத்னதேரர், அடங்கலான கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.
எதிர்த்தரப்பு முன்வரிசையில் மஹிந்த ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, இரா.சம்பந்தன், அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அடங்கலான கட்சித் தலைவர்கள் பலரும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சபை நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. அதற்கு முன்னரே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆசனத்தில் அமர்ந்திருந்த தோடு, பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகையில் எழுந்துநின்று மரியாதை செலுத்திய விசேட அம்சமாகும்.
பிற்பகல் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளிலும் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்ததோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்குள் நுழையும்போதும் அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற தேனீர் விருந்துபசாரத்திலும் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு எம்பிக்களுடன் சகஜமாகக் கலந்துரையாடியதைக் காணக்கூடியதாக விருந்தது. சம்பிரதாயபூர்வ நிகழ்வைப் பார்வை யிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச, மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தனர்.

ad

ad