தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத நாங்களும் சில நேரங்களில் ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்த அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அம்பானிக்கு ஆதரவாக என்னை விரட்ட முயற்சிக்கிறார்கள் என்று கோபமாக பேசினார்.
ஆரம்ப நிலையிலேயே ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து அவரது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனைதொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.