புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்கு தீர்வு

இந்தியாவின் நிலைப்பாடு இதுவே
இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் அமைந்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில்
அனைத்து தரப்பினரும் இணைந்து அனைவரது ஒத்து ழைப்புடனும், சிறந்த தீர்வொன்றை அடைய முன் வருவதே சிறந்த வழியாகுமென இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது. இச்சட்டம் திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனை தானே தவிர, இது திணிக்கப்பட்ட விடயமல்ல. அன்றைய காலத்தில் இரு நாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப் பட்டது.
ஆக, இணக்கமில்லாமல் அதனை நாங்கள் இலங்கை அரசிடம் திணிக்கவில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும் அது இருநாட்டு உறவினையும் பாதிக்காமலே செய்வோம் என்றார்.
13 ஆவது திருத்தம் மற்றும் அரசியல் தீர்வு பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இது நல்ல விடயம்தான். ஆனாலும், சிலர் அக்குழுவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறி வருகிறார்கள்.
எம்மைப் பொறுத்த வரையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்து அனைவரது ஒத்துழைப்புடனும் சிறந்த தீர்வொன்றை அடைய முனைவதே சிறந்த வழி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad