புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஐ.நாவும் உடந்தை: டெல்லியில் ஆர்ப்பாட்டம்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கை அரசாங்கம் மீது நடவடிக்கை எடுக்குமாறும் டெல்லியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கரின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஐ.நாடுகள் சபை, இந்தியா மற்றும் இலங்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முக்கியமானவர்கள். ஐ.நாவில் விஜய நம்பியார் இந்தியா சார்பாக நடித்துள்ளார்.
மக்கள் தீர்ப்பாயத்தின் மூலம் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
அதேநேரம், இரு நாடுகளும் பயங்கரவாத்திற்கு எதிராக போர் என்று கூறிக் கொண்டனர்.
இந்த நிலையில், 2009ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் போரைப் பயன்படுத்தி தமிழர்களை அடியோடு அழிக்க முயன்றமைக்கு பிரான்ஸும் துணைபோனது என இவ்வார்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பப் பட்டது.
மேலும், இனப்படுகொலைக்கு ஆதரவான இந்தியாவின் இறந்த மனட்சாட்சியைத் தட்டியெழுப்ப இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என தெரிவிக்கபட்டது.

ad

ad