புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

ஊழல் தலைவர்கள் பட்டியல்! அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நிதின் கட்காரி நோட்டீஸ்!
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அவரது ஊழல் பட்டியலில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி
உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்
ஹாலிவுட்பஸ் என்ற இணையதளம் நடத்திய உலகில் வாழும் அழகான பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 4வது இடத்திலும், இந்தி நடிகை தீபிகா படுகோனே 29வது இடத்தையும்
மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை! ஆம் ஆத்மி அறிவிப்பு!
டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர்
மரண தண்டனை குறைப்பு: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு
கைதிகள் 15 பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் அழுத இந்திய தமிழ் குழந்தையை பணிப்பெண், தரையில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33) அவரது மனைவி தேன்மொழி (24). தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை குழந்தையை

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் 4 வெற்றியாளர் திவாகர்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் 4 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு  ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த

1 பிப்., 2014

தமிழன் வாழாத ஒரு நாடு இல்லை. ஆனால் இன்று தமிழர்க்கென்று ஒரு நாடில்லை!
உலகெங்கும் அகதியாக சென்ற தமிழர்களில் பெரும்பாலானோர் அந்தந்த நாடுகளில் அரசியல் தலைமைகள் ஏற்கும் அளவும் பல்வேறு வளர்ச்சியின் சிகரங்களை தொடுமளவும் முன்னேறி வந்துள்ளனர். அந்த தேசங்களின் நீரோட்டத்தில் கலந்து நல்ல பிரசைகளாக வாழ்ந்து அந்த

சதாபிரணவனின் "God Is Dead" குறும்படம் உங்களது வாக்களிப்புக்காக ...

பிரான்ஸ் இன்  பிரபலமிக்க வங்கியான "BNP Paribas "ஆதரவில் நடைபெறும்  Mobile film festival இல் 710 குறும்படங்கள் பங்குபற்றி  அதில் 50 குறும்படங்கள் தெரிவு
ஆவா குழுவைச் சேர்ந்தவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆவா குழுவினர் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சர்வதேச விசாரணையே தேவை நிஷாவிடம் கோரும் கூட்டமைப்பு; கொழும்பில் இன்று இரவு விசேட சந்திப்பு 
"இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை. இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய அதிகார சபை

அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை யொன்றை ஸ்தாபி ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது திறக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள சகல அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் செயற்படும் வகையில் இந்த அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க மற்றும்

தென் சூடானுக்கான தற்காலிக தடை நீக்கம்

இன்று முதல் வேலைவாய்ப்புக்காக இலங்கையர் செல்லலாம்
திமுக அழிந்துவிடும்: சுப்ரமணிய சுவாமி

அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சீட் தர ரெடியானால் நான் போட்டியிட ரெடி: சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சீட் தந்தால் போட்டியிடத் தயாராக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நிஷா தேசாய் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு- இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் இல்லை என்கிறார் நிஷா
இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்ஸை அவரது அமைச்சில் சந்தித்தார்.இங்கு கருத்து வெளியிட்ட பிஸ்வால்,
வடக்கு கிழக்கு ஆயர்களை சந்திக்க விரும்பும் ஜனாதிபதி
யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றனவடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஆயர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி விரும்புவதாகவும்,
அழகிரிக்கு அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதில் இருந்தே, ஆதரவாளர்கள் பயங்கர கோபத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
லண்டனில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
திமுக மாநில மாநாட்டில் 25 ஆயிரம் மாணவரணியினர் சீருடையுடன் பங்கேற்பு
திமுக மாநில, மாவட்ட மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கோவை கணேஷ்குமார், குத்தாலம் அன்பழகன், மதுரை மகிழன்
சாமியார் அசராம் பாபுவுக்கு 10 ஆயிரம் கோடி சொத்து!
 டெல்லி, ராஜஸ்தான், குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ள பிரபல சாமியார் அசராம் பாபு மீது உ.பி.யை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்
ஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் : வைகோ
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பரிசுப் பொருள்கள் குறித்த மனு மீது 3-இல் தீர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சென்னை கிழக்கு அபிராமபுரத்தில் கைப்பற்றப்பட்ட 144 குறியிடப்படாத பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக்

    வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில்அரசு அறிவிப்பு

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும்

டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

டீசல் விற்பனையால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அந்த

ஊழல்வாதிகள் பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகள் என்று பலரது பெயரை இன்று வெளியிட்டார். அதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

31 ஜன., 2014

நியூசி.யுடன் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி

நியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது.  3வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

ஊழல்வாதி பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு கட்காரி 3 நாள் கெடு

ஊழல்வாதிகள் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் பெயரை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்காரி, கெஜ்ரிவால் மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்..
தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!


பஞ்சாப்பைச் சேர்ந்த தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் 31.01.2014 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேவேந்திர சிங் புல்லரின் மருத்துவ அறிக்கையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மரண தண்டனையை குறைக்கக் கோரும் மனு பற்றி டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
கோழிக்கறி வியாபாரியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (வயது 45) அதே பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்வபாத்யா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்
கலைஞருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை அவரது சிஐடி காலணி இல்லத்தில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்! பேரவைத் தலைவர் நடவடிக்கை
 
அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் பகுகுணா!
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை விஜய் பகுகுணா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விருப்பதை ஏற்று தான் ராஜினாமா செய்தாக அவர் தெரிவித்துள்ளார். 
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் பண்ணை தோட்டத்தில் மதுரை போலீசார்
 கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்
வடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.
அரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன் கேள்வி
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகப் புற்று நோய் தினம்

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

உலக புற்று நோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வருடத் திற்கான தொனிப்பொருள், மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். இதற்கமைவாக இலங்கை மக்களுக்கு புற்றுநோய்

இலங்கையில் வருடந்தோறும் 25,000 பேர் புற்றுநோய்சிகிச்சைகளுக்காக புதிதாக பதிவு

சுகாதார கல்விப் பணியகம் அதிர்ச்சி தகவல்
பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை புற்றுநோய்கள் பாரிய அச்சுறுத்தல்
சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் குணப்படுத்தலாம்

பங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையணி இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் வெற்றி

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஓடொங்கோ ஜேஜே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது உகண்டா பாதுகாப்பு அமைச்சர் விசேட ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

ஏழாவது ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழா
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பனிப்புயல்

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது, இதன் காரணமாக இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
 இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சி வரை தற்பொழுது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம்

சூரிச்சில் கிளிநொச்சிப் பெண் கள்ளத் தொடர்பு - அந்தரங்க உறுப்புக்குள் அசிற் ஊற்றிய கணவன் கைது

சுவிஸ்'லாந்தின் சூரிச் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குறித்த பெண்ணிண் ஆண் நண்பர் வந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அணி உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
தில்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை பகலில் சந்தித்துப் பேசினார். மதிமுக சட்டப்பிரிவு செயலர் வி. தேவதாஸ், அ. செந்தூர் பாண்டியன்
திமுகவில் நடப்பது நாடகமா? உண்மையா? :கலைஞர் பேட்டி
மு.க.அழகிரி இன்று மதுரையில் அளித்த பேட்டியில்,  ‘’கலைக்கப்பட்ட மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்; அவர்களை சஸ்பெண்ட்

திராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில் சொல்லட்டும் :
ஸ்டாலின் ஆவேசம்
திமுகவின் 10வது மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் இன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது.  லட்சக்கணக்கானோர் திரண்ட இப்பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றும்போது,  ‘’திருச்சியில் நடைபெறும்
அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு ( படங்கள்)
தி.மு.க தலைவர் கலைஞரை மிரட்டியதாக, கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அழகிரிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி
ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது புகார்
திருமணமான ஒரு குழந்தைக்கு தந்தையான ஆண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
"3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும் அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது" என்று நீதிபதிகள் கருத்து  - உச்ச நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

30 ஜன., 2014



ஆடை வடிவமைத்து சாதித்த ஒற்றை கை மாணவி
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற  9வது கவின்கலை நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பரத நடனத்தில் நுண்ணுரியியல்
ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரசத்துக்கு உடன்படுவேன்: மு.க.அழகிரி பேட்டி
மதுரையில் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோக வியாழக்கிழமை டெல்லியில் சந்தித்தார்.
பாராசூட் விரியாததால் பைலட் பயிற்சி மாணவி சேலம் ஏர்போர்ட்டில் விழுந்து உயிரிழப்பு
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரம்யா (26). இவரது கணவர் வினோத் (28). இவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், இந்தியா ஸ்கைடைலிங் பாராசூட் அசோசேஷியன் என்ற அமைப்பின்
மு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று தனது 63வது பிறந்தந்த நாளை கொண்டாடினார்.  நடிகர் ரஜினிகாந்த், அழகிரியை தொடர்பு கொண்டு, வாழ்த்துகூறினார்.
நடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: ஆளும் கட்சி தீர்மானம் - ஐ.தே.கட்சியில் மற்றுமாரு ஆளும் கட்சி உறுப்பினர் இணைவு
மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்த தொலைக்காட்சி நடிகைகள் எவருக்கும் வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து செய்க!- உச்சநீதிமன்றில் ராம் ஜெத்மலானி வாதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம்,

ஜயவர்தனவின் இரட்டைச் சதத்தால் தோல்வி நெருக்கடியில் பங்களாதேஷ்

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் முடிவின்போதே பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தனவின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
மிர்பு+ரில் நடைபெற்றுவரும் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 375

82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை விளக்கம்

தற்போதைய நிலைமை, LLRC பரிந்துரை அமுலாக்கம், மனித உரிமை முன்னெடுப்புகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜP.எல், நிமல் சிறிபால டி சில்வா விரிவாக எடுத்துரைப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், 82

வடமாகாண சபை தீர்மானத்திற்கு சர்வமதத் தலைவர்கள் கண்டனம்

ஜெனீவா மாநாட்டையிட்டு புலம்பெயர்ந்தோர் பின்னணியில் தீர்மானம் நிறைவேற்றம்
நாட்டைக் காக்க சகலரும் ஒன்றுபட வேண்டும்
இலங்கை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம்
16,000 டொலர்கள்16,440 யூரோக்கள்

கைப்பையினுள் மறைத்து வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தும் முயற்சி முறியடிப்புவிமான நிலையத்தில் பெண் கைது

தனது கைப்பையில் மறைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திய இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று இரு யானைக்குட்டிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டன. ‘கண்டுல’, ‘அபீத’ என்ற பெயர்களையுடைய இந்த யானைக்குட்டிகளை கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடந்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

தமிழர் பேரவையினர் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு


லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட்டைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.கூ,மற்றும் த.தே.ம.மு குழு லண்டன் விஜயம் கூட்டமைப்பினரின் கருத்துக்கள்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் நில அபகரிப்புக்கெதிரான மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர்

    இன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

    அழகிரியா? ஸ்டாலினா?இன்று பலப்பரீட்சை

மு.க.அழகிரி தனது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை (ஜன.30) மதுரையில் அதிக அளவில் தனது ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளார்.

அழகிரி அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்: நடிகர் ரித்தீஷ்
 
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் நடிகரும், ராமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ்.    

அழகிரியுடன் மூன்று திமுக எம்.பிக்கள் தீவிர ஆலோசனை


மு.க.அழகிரியின் 63வது பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  பிறந்தநாளையொட்டி இன்று மாலையே அவரது இல்லம் பரபரப்பாகியது.   வண்ண விளக்குகளால்
அண்ணன் அழகிரியின் பின்னால் துணை நிற்பேன்; ஒருநாளும் பின்வாங்க மாட்டேன்: நடிகர் நெப்போலியன்முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான நடிகர் நெப்போலியன், இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்றார்.   அவர், மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்று,  அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பயங்கர போதையில் சீரழியும் பருவப் பெண்கள்!


மிகவும் அதிர்சிகரமான தகவல், நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கின்றன
.இது போன்ற கல்லாச்சார சீரழிவுகளை கண்டு வேதனைப்படுகின்றோம்..தமிழன்

29 ஜன., 2014

லேட்டஸ்ட் நியூஸ்
மு க அழகிரிக்கு 3 எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து 
நெப்போலியன் ,சித்தீக்,கே,பீ,ராமலிங்கம் ஆஅகிய எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து  சொன்னார்கள்.அழகிரியின் சொல்லுக்கு கட்டுப் படுவேன் என நெப்போலியன் கூறினார் 
Bangladesh 232 & 35/1 (9.0 ov)
Sri Lanka 730/6d
Bangladesh trail by 463 runs with 9 wickets remaining
Stumps - Day 3
Australia won by 13 runs
சதுரங்கப் போட்டி யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைப்பு
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை  நடைமுறைப்படுத்தும் நோக்கில்  இன்று யாழ் வலயத்தில்  உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து
தெல்லிப்பளை கிறாஸ் கொப்பர்ஸை வென்றது யாழ்ப்பாணம் சென்ரல்
யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன்  யாழ்ப்பாணம் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், யாழ். மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடத்தி வரும் லீக் முறையிலான 20/20

சுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் ஸ்டிபன், எட்பேர்கை தன் பயிற்சியாளராய் தேர்ந்துதெடுத்துள்ளார்.
2014ம் ஆண்டில் வரவிருக்கும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற பெயர் பெற்ற சுவிடன் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் எட்பர்கை முக்கிய கோச்சாக தன் பயிற்ச்சிகுழுவில் நியமித்துள்ளார்.
கால்பந்தாட்ட வீரரின் விருதை கெடுத்த ‘முத்தம்’

2013ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதினை எகிப்திய வீரர் முகமது சாலாவுக்கு சுவிஸ் சூப்பர் அணி வழங்கி கௌரவித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் 2013ம் ஆண்டிற்கான விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 ரொறன்ரோவில்; அதிகரித்த குளிர் நிலவும் எனக் காலநிலை அவதானநிலையம் மக்களுக்கு அறியத் தந்துள்ளது.
பனியும் அதிகரித்த குளிர் நிலையும் இணைந்துள்ள இக்கட்டான தருணத்தில் கடந்த கிழமை 1,600ற்கு மேற்பட்ட வாகனவிபத்துக்களி; ஏற்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. அதிகரித்த குளிர் நிலவுவதற்கான காரணம் குளிர்ந்த காற்று வீசுகின்றது
உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.
சுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது.
குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்

ஸ்பெயின் நாட்டில் 10 மாத குழந்தை தன் தாயால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸை சேர்ந்தவர் கத்ரினா காடிட் ஸ்டஹேலி(40). இவர் மன வளர்ச்சி குன்றிய தன் 10 மாத குழந்தையை சுவிஸ் மருத்துவமனை


சுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS)  சியோன்  மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சந்தேகமான பின்னணியில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.
வாலிபரை விழுங்கிய ராட்சத அலை -வீடியோ 

ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன்பிடிக்கும் கப்பலை புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.
மன்னாரில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 வது தடவையாக இன்று புதன்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது. இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜெயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபை
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.போர்க்குற்ற விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் 27ம் திகதி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை சர்வதேச
அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகனும், சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி இன்றே துவங்கிவிட்டார்.
திமுகவிலிருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு ஆதரவா
உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆதாரம் இருக்கிறது என்று நான் கூறவில்லை?: அழகிரி அதிர்ச்சி பதில்
உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்களை 31ம் தேதி வெளியிடுவேன் என்று நான் கூறவில்லை! என்று ஆச்சரியம் கலந்த பதிலைக் கூறி, செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியூட்டினார்
தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தர  நீக்கம்?: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு
திமுகவின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த வாரம் தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரி, தி.மு.க.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி!- பந்துல குணவர்தன
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் திட்டமிட்ட முயற்சியின் முதல்படியாகவே மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான யோசனை
முருகன், சாந்தன், பேரறிவாளன் மனு மீது நாளை விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச
ஸ்டாலினுடன் சமரச பேச்சுவார்த்தையா? : அழகிரி ஆவேசம்
 


மு.க.அழகிரி திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அளித்த விளக்கத்தை அழகிரி மறுத்தார்.  ஆனாலும் திமுகவினர் ஆத்திரம் கொண்டு அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுவதும் எரித்து வருகின்றனர்.  
அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
 சட்ட சபை கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம்  திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 
சிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகிறது அமெரிக்கா – கொழும்பு, லண்டன், ஜெனிவாவுக்கு விரைகிறார்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, இது தொடர்பான ஏற்பாடுகள், ஒழுங்குகளைக் கவனிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரியை சிறிலங்கா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பவுள்ளது.
தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், முதற்கட்டமாக நாளை மறுநாள்

விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா
11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது! மாணவி மீட்பு!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவி பெயர் பிரபா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்
கூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல் சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி: பிரேமலதா பேட்டி
உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வருகிற 2ம் தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் மனைவி பிரேமலதா புதன்கிழமை எறஞ்சி வந்தார்.
மாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
எறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு
ஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அலுவலர்
புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் சி. தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான இவர், புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குப்
அண்ணன் அழகிரி உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் மற்றும் ஏராளமான முன்னோடிகளும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில் ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக நான்

ad

ad