புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014

தமிழர் பேரவையினர் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு


லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட்டைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து தமிழர் பேரவையினர் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.
மனித உரிமை மாநாட்டில் பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஏன் கடுமையாக இருக்கவில்லை என்பது போன்ற விடயங்களை ஆராய்ந்துள்ளார்கள்.
போர்க்குற்ற மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படும் என இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பிலும், எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரித்தானிய தமிழர் பேரவை நினைவூட்டியுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள, எதிர்க்கட்சித் தலைவர் மிலிபான்ட், பாராளுமன்றில் இது தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, ஈழத்தில் நில ஆக்கிரமிப்பு நடப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, சனல்- 4 வெளியிட்ட இசைப்பிரியாவின் காணொளியையும் தொழிற்கட்சித் தலைவருக்கு காண்பித்துள்ளனர்.

ad

ad