புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2014

தமிழன் வாழாத ஒரு நாடு இல்லை. ஆனால் இன்று தமிழர்க்கென்று ஒரு நாடில்லை!
உலகெங்கும் அகதியாக சென்ற தமிழர்களில் பெரும்பாலானோர் அந்தந்த நாடுகளில் அரசியல் தலைமைகள் ஏற்கும் அளவும் பல்வேறு வளர்ச்சியின் சிகரங்களை தொடுமளவும் முன்னேறி வந்துள்ளனர். அந்த தேசங்களின் நீரோட்டத்தில் கலந்து நல்ல பிரசைகளாக வாழ்ந்து அந்த நாடுகளின் நல்ல பிரசைகளாக சாதனைகள் பல முடித்து உள்ளனர்.

மாற்றான் நிலம் ஈழத்தின் அகதித் தமிழர்க்கு மடி தந்து வரவேற்று வழி காட்டி அரவணைத்துள்ளது..ஆனால் எம் அன்னைத் தமிழகமோ... எமக்கு வதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்கின்றது.

மொழியால் ஒன்றுபட்ட ஒரு உன்னதமான இனத்தின் அரவணைப்பு நாடி தமிழன்னை நிலம் என்று அடைக்கலம் தேடி வந்த ஈழத்து தமிழ் அகதிகள் கண்ணீரும் கம்பலையுமாக ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் கேவலமான சூழலில் வாழும் இழி நிலை எம் தாய் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இதற்கு யார் காரணம்?

உணர்வுள்ள தமிழர்கள் இருந்தும் தமிழகத்தால் அடைக்கலம் புகுந்த தமிழனை கூட கண்ணீர் துடைத்து வாழவைக்க முடியாத் போனமைக்கு யார் காரணம்? அடிமைப்பட்ட நிலையில் தமிழகத்து தமிழர்களே வாழ்வதொன்றே காரணம்.

வதை முகாம்களில் வருத்தத்துடன் வாழும் ஈழத்து தமிழ் அகதிகளுக்காக தமிழகத்திலிருந்து குரல் கொடுக்க ஒற்றை தமிழ் தலைவருமா இல்லை???? உணர்வுள்ள தமிழர்களுமா இல்லை? தமிழகமே விழி திற. விடை பகர்.

சிறப்பு அகதி முகாம்கள் என சொல்லப்படும் ஈழ அகதிகளுக்கான வதை முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு தமிழர்கள் விடுதலையாகும் வரை தமிழகத் தலைவர்கள் தமிழர்கள் யாவரும் உங்களது போராட்டங்களை உண்மையாக நேர்மையாக உறுதியாக தொடர வேண்டும் என தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன்

ad

ad