புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2014

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பரிசுப் பொருள்கள் குறித்த மனு மீது 3-இல் தீர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சென்னை கிழக்கு அபிராமபுரத்தில் கைப்பற்றப்பட்ட 144 குறியிடப்படாத பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக்
கோரும் மனு மீது பிப்ரவரி 3-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், சென்னை கிழக்கு அபிராமபுரத்தில் கைப்பற்றப்பட்ட குறியிடப்படாத 144 பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக் கோரும் மனு மீதான வாதம், பிரதிவாதம் நடைபெற்றது.
இதையடுத்து, இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 3-ஆம் தேதி அளிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், மெடோ அக்ரோ ஃபாம் நிறுவனத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளதால், அதன் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ad

ad