புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014

ஜயவர்தனவின் இரட்டைச் சதத்தால் தோல்வி நெருக்கடியில் பங்களாதேஷ்

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் முடிவின்போதே பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தனவின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
மிர்பு+ரில் நடைபெற்றுவரும் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 375
ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை, பங்களாதேஷ் அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. இதில் 42 ஓட்டங்களுடன் மூன்றாவது நாளை ஆரம்பித்த முன்னணி வீரர் மஹேல ஜயவர்தன அபாரமாக ஆடி ஓட்டங்களை அதிகரித்தார்.
இதன்போது மஹேல ஜயவர்தன 6 ஆவது விக்கெட்டுக்காக அணித்தலைவர் அஞ்சலே மத்தியுஸ{டன் இணைந்து 179 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். சிறப்பாக ஆடிய மத்தியுஸ் 162 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றார். மத்தியுஸ் டெஸ்ட் அரங்கில் பெறும் 14 ஆவது அரைச்சதம் இதுவாகும். தொடர்ந்து ஜயவர்தனவுடன் 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கித்ருவன் விதானகே பங்களாதேஷ் அணியை மேலும் திக்குமுக்காட செய்தார்.
தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய விதானகே கன்னி சதத்தை பெற்றார். 104 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 12 பௌண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றார். மறுபுறத்தில் மஹேல ஜயவர்தன டெஸ்ட் அரங்கில் தனது 7 ஆவது இரட்டை சதத்தை பு+ர்த்திசெய்தார். 272 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 16 பௌண்டரிகள் 4 சிக்'ர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 203 ஓட்டங்களை பெற்றார். டெஸ்ட் வரலாற்றி ஏழு அல்லது அதற்கு அதிகமான இரட்டைச் சதங்கள் பெற்றவர்களில் ஐந்தாமவராக ஜயவர்தன இடம்பிடித்தார்.
இதில் ஜயவர்தன, விதானகே ஜோடி 7 ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 184 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியில் இலங்கை 187.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 730 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக ;கொண்டது.
மஹேல ஜயவர்தன தனது இரட்டை சதத்தை பெற சிக்ஸர் ஒன்றை விளாசிய நிலையிலேயே அணித்தலைவர் மத்தியுஸ் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி பங்களாதேஷ் விட்டுக்கொடுத்த 730 ஓட்டங்களே அது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் எதிரணிக்கு விட்டுக்கொடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும். முன்னர் கடந்த 2012 நவம்பரில் நடந்த டெஸ்டில் பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு இன்னிங்ஸ் ஒன்றில் விட்டுக்கொடுத்த 648 ஓட்டங்களே அதிகமாக இருந்தது. பங்களாதேஷ் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களையே பெற்றது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கையை விடவும் 498 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியுடனேயே நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி நேற்று ஆட்ட நேர முடிவின்போது 9 ஓவர்களுக்குள் ஒரு விக்கெட்டை இழந்து 35 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் தமீம் இக்பால் 11 ஓட்டங்களுடன் ரங்கன ஹேரத்தின் பந்துக்கு வெளியேறினார். 'ம்ஸ{ர் ரஹ்மான் 9 ஓட்டங்களுடனும் மார்'ல் அயுப் 11 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
எனினும் ஆட்டத்தின் இரண்டு தினங்கள் முழுமையாக எஞ்சியுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 463 ஒட்டங்களை பெறவேண்டியுள்ளது. அந்த அணி வசம் 9 விக்கெட்டுகளே கைவசம் உள்ளது. இந்த நிலையில் காலநிலை குறுக்கிடாத பட்சத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியை தவிர்த்தால் சாதனையே. இன்று போ

ad

ad