புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


ஐந்நூறு பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டிவரும்: அசாத்சாலி

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் முடியுமானால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம்.


அடுத்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதானா குற்றப்பிரேரணை பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இரவு குறித்த அறிக்கை ஜனாதிபதியின் ஒப்புதல் கையொப்பத்தினை பெரும் பொருட்டு ஜனாதிபதியிடம்

இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜெத்மலானியை மீண்டும் பாஜகவில் சேர்க்க முடிவு
கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதற்காக, பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராம்ஜெத் மலானியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
 

பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தற்கொலை செய்ததாக எழுதி வாங்கிவிட்டு மகளை கொன்ற தந்தை
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் 23 வயது மகளை கொலை செய்ததாக பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ளிய
 மீனவர்கள்- பதற்றத்தால் போலீஸ் குவிப்பு 
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிர மித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை,  இன்று

12 ஜன., 2013


ரிஸானா

OlehArulezhilan
January 11, 2013

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன். ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்த  ஜெயலலிதா மீதான குற்றவியல் வழக்கு ரத்தானது.  ஜெயலலிதாவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
மேலும் திமுக குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க அனுமதி வழங்கியும், ஜெ.மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் 4 மாதத்தில்  விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


தயாநிதிமாறன் வழக்கு:
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு, 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீ

பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் தவறானவை! அமெரிக்கா
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, தமது கவலையை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது! மரண தண்டனை கண்டிக்கத்தக்கது! – நவநீதம்பிள்ளை
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார்.

சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் நாமநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள்

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death

ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்… 

—”ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு

—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!

வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!



சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்

எங்கள் தமிழ்  பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை  சவூதி அரசின் தண்டனை இதுவா ?

எங்கே  என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை  அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும்  முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு.  ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம்  காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை    எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு

 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரதம நீதியரசரின் வீட்டின் முன் பால்சோறு சமைத்து கொண்டாட்டம்




பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக குழுமியுள்ளவர்கள் பால்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நான் வாக்கெடுப்பில் பங்குபற்ற போவதில்லை: டி.யு.குணசேகர

பாராளுமன்றின் மீயுயர் தன்மையும் நீதிமன்றின் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதன் பொறுப்பை பாராளுமன்றம் மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டி.யு.குணசேகர, நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில்


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்களால் போராடி வெற்றிபெற்றுள்ளது.

இன்று ராஜகோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில்


இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகளைக் கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப்

11 ஜன., 2013


           சேவை வரி விதித்திருக்கும் மத்திய அரசை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7-ந்தேதி தமிழ்த்திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

சேவை வரி என்றால் என்ன?


நீங்கள் ஒரு ஹோட்டலுக்குப் போய் ரெண்டு இட்லி கெட்டிச்சட்னி சாப்பிட்டு விட்டுப் போய் விடுவீர்கள். இட்லி சாப்பிட்ட உங்களை அரசால் தேடிக் கொண்டி ருக்க முடியாது. இட்லியை தந்து உங்களுக்கு சேவை செய்த ஹோட்டல் நிர்வாகம் வரியை மொத்தமாக அர சிடம் கட்டும். உங்கள் பில்லில் மறைமுகமாக இந்த வரி வசூலிக்கப் படும்.



            டி.டி.ஹெச். என்கிற புதிய வியாபார முறையை கொண்டு வர கமல் என்கிற தனியொரு ஹீரோ போராடிக்கொண்டிருக்க... "மறந்தும் மறைமுக ஆதரவைக் கூட கமலுக்கு கொடுத்துவிடக்கூடாது' என்பதில் தெளிவாக ஒதுங்கி நின்றார்கள் மற்ற கதாநாயகர்கள். 
ண்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரங்களை வெறும் 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார் அப்புக்குட்டி என்பவர்.

இந்த அப்புக்குட்டி, சென்னிமலை ஒன்றிய சேர் மன் அ.தி.மு.க. கருப்புசாமி யின் பினாமி.

சேர்மன் கருப்பு சாமிக்கு, விஸ்வரூப பாது காப்பாக இருப்பது யார்? ""வேறு யார்? நம்ம பொதுப்பணித்துறை மாண்புமிகு கே.வி.ராமலிங்கம் தான்!'' என்கிறார்கள் ஈரோடு மாவட்டம், சென்னி மலை ஒன்றியம், பாலத்தொழுவு ஊராட்சி யின் தலைவரும்




""ஹலோ தலைவரே...…ஒரு எதிர்க்கட்சி யோட அறிவிப்பு தமிழக அரசியலில் இந்த அளவுக்கு பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கிடிச்சே...'' 

""வாய்ப்பிருந்தால் கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் சொன்னதைத்தானே சொல்றே.. தேசிய அளவிலான ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து மாநில அளவிலான தமிழ் பத்திரிகைகள் வரை எல்லாவற்றிலும் இது சம்பந்தமான செய்திகள்தான்.. அவங்கவங்க பார்வை இருக்கட்டும். கட்சியிலும் கலைஞர் குடும்பத்திலும் எப்படிப் பார்க்குறாங்கன்னு சொல்லுப்பா... ...''nakkeeran



             கில இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் இருக்கும் ஒரு ஊழல் திமிங்கிலத்தை, பொறி வைத்து மடக்கியிருக்கிறது சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புத்துறை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இவர், புரோக்கராக இருந்து, வாங்க வேண்டியதை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்ததால், எங்கே தங்கள் குட்டும் வெளியே வந்துவிடுமோ என கைபிசைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். என்ன நடந்தது?

அரசியலில் இருந்து விலகுகிறேன்:
 ராமதாசுடன் நட்புடன் இருப்பேன்:
பொன்னுசாமி பேட்டி
 
பாமகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எ.பொன்னுசாமி இன்று (11.01.2013) காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,


இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு
கவுரவ டாக்டர் பட்டம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (11.01.2013)  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ரோசைய்யா இப்பட்டத்தை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கினார். இவ்விழாவில் தமி்ழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெடுமாறன் தனது மனசாட்சிக்கு டாட்டா கொடுத்து விட்டாரே என்றெண்ணி வேதனைதான் ஏற்படுகிறது! கலைஞர் அறிக்கை!

நான் கம்யூனிசக் கொள்கைகளில் சிறு வயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பழ.நெடுமாறன் என்னுடைய கருத்துக்களை மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதிய கட்டுரை ஒன்றினை ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்ட இடமாம் ! வாழ் நாளில் ஒருமுறைதான் இங்கே நீங்கள் தங்க முடியும் ! பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நீங்கள் உங்கள் பொழுதைப் போக்கி படுத்து உருள வெறும் 100 டாலர்கள் தான், செலவாகும் 

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில், களப்பு முனை என்னும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றை சிங்களவர்கள் நிர்மாணித்துள்ளார்கள். தமிழர்களின் எலும்புக்கூடுகள் புதையுண்டுள்ள இப்


இது என் விருப்பம்! என்னை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை!


கமல் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் டி.டி.எச் ரிலீஸ் முயற்சி கமலுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்குமிடையே மிகப்பெரிய போராட்டத்தையே உருவாக்கியிருந்தது. பொங்கல் ரிலீஸாக திரைக்கு

“ஹசித மடவலவின் கொலை என்னை சிக்க வைக்க ராஜபக்ஸவினர் மேற்கொண்டது” மேர்வின் சொன்னார்

தனக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தூண்டி விடுவது கோத்தபாய ராஜபக்ஷ என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் என்னுடன் இருந்தவர்கள், எனக்கு உதவியவர்கள், நான் அரசியல் மூலம் தாக்குவேன்,

முன்னாள் இராணுவச் சிப்பாயான ஏ.எம். சமன் சுஜீவ என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் குறித்த இராணுவச் சிப்பாய், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்தோர் தமிழர் உரிமை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள்!- பாஸ்க்கரா
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்த, குறிப்பாக சிறுபான்மை இனத்தைச் சார்ந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இனி வரும் காலங்களிலாவது சிறுபான்மை சமூகத்தின் உரிமை பற்றி பேசி சமூகத்தை ஏமாற்றுவதை கைவிடவேண்டும் என 



இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் முன்னாள் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
சிவிலியன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு விடயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
புத்தாண்டில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் 2013ம் ஆண்டில் ஜனவரி முதல் நாளிலிருந்து பல புதிய சட்டங்கள் அறிமுகமாகின்றன.
இவை சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்குத் துக்கத்தையும் தருவது உறுதி.


மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலையில் அண்மையில் கைதான போலி மருத்துவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்படி போலி மருத்துவரான திரு அஜித்குமார் என்பவர் பல இளம் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதுடன் பெண்களுக்கான பிரசவ மருத்துவமும் செய்துள்ளார்.


சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு கழுத்து வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.


சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு கழுத்து வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.

10 ஜன., 2013


கொழும்பில் நைட் கிளப் வாழ்க்கை, அதிர்ச்சிப் புகைப்படங்கள்!
கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி வாழ்க்கையை காட்டுகின்ற பிந்திய ஒரு தொகைப் புகைப்படங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன. 

உதயன் விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்பத்திரிகைகள் தீக்கிரை


தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரை ஸ்பேனரால் அடித்துக் கொன்ற 16 வயது சிறுவன்

சென்னை: தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரைக் கொன்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்து உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(30) என்பவர் சென்னையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்டில் டிரைவராக பணியாற்றினார்.

பரிஸ் நகரில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான 3 குர்தீஷ் பெண்கள் சுட்டுக்கொலை-Photos

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் சம்பவத்தை உறுதி செய்ததுடன், இதுகுறித்து விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்களின்



தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது! காவிரி கண்காணிப்புக்குழு கைவிரிப்புதமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது என நீர் திறந்துவிடக் கோரிய தமிழகத்திடம் காவிரி கண்காணிப்புக் குழு!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அணி திரளும் ஈ.பி.டி.பியின

ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நான்கு வயது குழந்தை மீதான பாலியல் வண்புணர்வு மற்றும் கொலையினை கண்டித்து இராணுவத்திற்கு எதிராக வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடாத்தினார்.
வடக்கு சுவிஸ்சில் இரண்டு இரயில்கள் மோதியது: 17 பேர் படுகாயம்
வடக்கு சுவிஸ்சில் இரண்டு ரயில் மோதியதில் 17 படுகாயமடைந்துள்ளனர்.
Rheinfall station லிருந்து 250 மீற்றர் தொலைவிற்குள் இந்த விபத்து நடந்துள்ளது.

9 ஜன., 2013


கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். 
 
 TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென  மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. 


மதிப்பெண் மேல் எடுத்தால் வருடம் ரூ. 3,000 உதவித்தொகை
சென்னை: தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.


தமிழரசுக் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் பங்கேற்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து , உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 10 பேர், தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றக்கோரி, கடந்த சில தினங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

வடக்கில் தமிழ் மொழிமூல இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியுமென்றால் ஏன் தெற்கில் இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியாதென கேள்ளவியெழுப்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வோறொரு சட்டமா எனவும் கேள்வியெழுப்பினார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர்

இலங்கையில் தொடரும் அச்சுறுத்தல்கள்! பிரித்தானியப் பாராளுமன்றில் நடைபெற்ற சூடான விவாதம்
இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் தொடரும் மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை மையமாக வைத்து பிரித்தானியப் பாராளுமன்றில் சூடான விவாதம் ஒன்று நடைபெற்றது.

கேரளா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது
தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றபோது தமிழக கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை கண்ணால் கண்டேன்! பிரான்ஸ் தூதுவர் வாக்குமூலம்
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நான் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சிப் பகுதியில் இருந்து நேற்று கடல்தொழிலுக்குச் சென்ற ஆறு படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரிசானாவிற்கு மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது! இல.பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
இலங்கைப் பணிப் பெண் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்கிறதாம் ஜி.எல்.பீரிஸ் கவலைதெரிவிப்பு:


நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா அரசு மீது

தாழமுக்கம் வலுவிழந்தது: காற்றுடன் மழை தொடரும்

60 கி.மீ. வேகத்தில் காற்று, கடல் கொந்தளிப்பாக இருக்கும்; மட்டு உறுகாமத்தில் கூடுதல் மழை
இலங்கைக்கு அருகே 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு தென்கிழக்குப் பகுதியாக நகர்ந்து வங்காள விரிகுடாவில் செயலிழந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வட மாகாணப் பாடசாலைகள் மோதும் கரப்பந்தாட்டத் தொடர்

வட மாகாண கல்வித் திணைக் களத்தினால் வட மாகாணப் பாடசாலை களுக்கு இடையேயான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பங்களை வட மாகாண கல்வித் திணைக்களத்தின்

ஐ. சி. சி. தர வரிசை

துடுப்பாட்டத்தில் அம்லா; பந்து வீச்சில் அஜ்மல் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இரு இடங்களையும் தென்னாபிரிக்க வீரர்கள் உள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:-

விநெகும தமிழ் மக்கள் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தும்

தமிழ் மக்களின் வாழ்வை தடுக்க முயல்கிறது தமிழ் கூட்டமைப்பு
வாழ்வின் எழுச்சித் திட்டம் தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். ஆனால் எமது மக்களின் வாழ்வில் எழுச்சி ஏற் படுவதை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது என ஈ. பி. டி. பி. தலைவர் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுலா பயணமாக கொழும்பு வருகை தந்துள்ளனர். கொழும்பிலுள்ள இராணுவ மகளிர் படைப்பிரிவுக்கு சென்ற அவர்களை, இராணுவ தளபதியின் பாரியாரும் சேவா வனிதாவின் தலைவியு மான மஞ்சுளிகா ஜயசூரிய வரவேற்று உரையாடுகிறார். (ஷி)

'திவிநெகும' சபையில் நிறைவேற்றம்

  • 2/3 பெரும்பான்மை வாக்குகள்
  • ஆதரவு 160, எதிர் 53
மாகாண சபைகளுக்கும் அப்பால் சென்று மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம் - அமைச்சர் பசில்
‘திவிநெகும’ வாழ்வெழுச்சி சட்டமூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம்  கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, 
பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும்  அடையாளமாக அமைந்துவிட்டது. 
 இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம்  தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும்


வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாரின் உடல்நிலைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக 18 வயது பள்ளி மாணவி ஒருவர் இணையத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அந்த பகுதியையே அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது.
18-year-old Rebecca Bernardo, a high school student from Brazil

28,000 கோடியா? என வாயைப் பிளந்த மீடியாக்கள் அது ஸ்பெக்ட்ரம் பணம் என எந்தவித அரசியல் தொடர்புமில்லாத ராம      லிங்கத்தை வைத்து கதகளி ஆடின.
டந்த டிசம்பர் 31-ந்தேதி இரவு. இந்திய வருமானவரித் துறையினர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறையில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தபோது இந்தியா வே அதிர்ந்து போனது. அந்த வீட்டுக்காரரின் உரிமையாளர் பெயர் ராமலிங்கம்.
""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் எதிர் காலத்தில் பிரச்சினையாக மாறும்னு நினைச்ச சர்ச்சைக்கு ஜனவரி 6-ந் தேதி  கலைஞர் முற்றுப்புள்ளி வச்சிட்டாரே!''

""தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் பேட்டி கொடுத்ததைத்தானே சொல்றே.. முன்மொழிந்ததன் பின்னணியில் உள்ள தகவல்களைச் சொல்லுப்பா?''




               பாச சாமியார் நித்திக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறது "ஜெ.'’போலீஸ்.

மதுரை இளைய ஆதீனப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்த நித்தி, இழந்த தன் இமேஜை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தனது பிறந்தநாளை திருவண்ணா மலை ஆசிரமத்தில்(?) கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்தார். கூலிக்கு ஆள் பிடித்தாவது  கூட்டத்தைக் காட்டவேண்டும் என்பது அவரது திட்டம்
 நீலகிரி குன்னூலிருந்து 36 கிலோ மீட்டர் மலைத்தொலைவின் மேல் இருக்கிறது குந்தா தாலுக்காவிலிருக்கும் எடக்காடு. 11 மணிக்குள் நடையாய் நடந்து எல்லோரும் வந்து சேர்ந் திருக்க முதலமைச்சர் ஜெ. மதியம் 1.20 மணியளவில்தான் மேடைக்கு வருவார் என்பதால் எடக்காடு பெண்களைச் சந்தித் தோம். 

இங்குதான் தமிழக முதல்வர் ஜெ., கடந்த 4-01-13ந் தேதி உடலை வருடும் இதமான தென்றலுக்கும், வானத்தைத் தொடும் அளவு வளர்ந்திருக்கும் மரங்களுக்கும்,  காற்றோடு கலந்து வீசும் ரம்யமான யூகலிப்டஸின் நறுமணத்திற்கு மிடையே குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் 50-வது ஆண்டு விழாவில்... அத்தொழிற்சாலையின் கண்காட்சி யைத் திறந்து வைத்து பின் பொன்விழாவில் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பில் நீலகிரியே சின்னாபின்னமாக்கப்பட்டது.

ம.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலராக, பதவி வகித்தவர், நாஞ்சில் சம்பத். கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். கொள்கை பரப்பு துணைச் செயலராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2003ம் ஆண்டு, நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்டிருந்த, மூன்று அவதூறு வழக்குகளை, வாபஸ் பெற, சென்னை, செஷன்ஸ் கோர்ட்டுகளில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சென்னை, வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தொடரப்பட்டிருந்த, அவதூறு வழக்கை வாபஸ் பெற, அனுமதி கோரி, தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு பொறுப்பான, நீதிபதி மீனா சதீஷ் முன், விசாரணைக்கு வந்தது. வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், விடுதலை செய்வதாக, நீதிபதி மீனா சதீஷ் உத்தரவிட்டார்.

நம்மூரில் இதெல்லாம் சகஜமப்பா!
நீதியமைச்சர் நீதி கேட்டுப் போராட்டம்.
தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை.
சனாதிபதியின் மகன் அதிக புள்ளி எடுத்து,சட்டக்கல்லூரியில் தேர்வு. 
சட்டக் கல்லுரி நுழைவில் இஸ்லாமிய மாணவர்களின் தீடீர் அதிகரிப்பு.
சட்ட நுணுக்கங்களின் ஆய்வு அற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு புனர்வாழ்வு.
இதைவிட சட்டக்கல்லூரி வாசலே தெரியாத,அமைச்சர்  தேவானந்த  சொல்கிறார்:
"அரசியல் உரிமை முதற் கொண்டு,கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடிப் பெற்றுத் தரத்தயாராக இருக்கிறேன்."
நம்மூரில் இதெல்லாம் சகஜமப்பா!
நீதியமைச்சர் நீதி கேட்டுப் போராட்டம்.
தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை.
சனாதிபதியின் மகன் அதிக புள்ளி எடுத்து,சட்டக்கல்லூரியில் தேர்வு. 
சட்டக் கல்லுரி நுழைவில் இஸ்லாமிய மாணவர்களின் தீடீர் அதிகரிப்பு.
சட்ட நுணுக்கங்களின் ஆய்வு அற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு புனர்வாழ்வு.
இதைவிட சட்டக்கல்லூரி வாசலே தெரியாத,அமைச்சர் தேவானந்த சொல்கிறார்:
"அரசியல் உரிமை முதற் கொண்டு,கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடிப் பெற்றுத் தரத்தயாராக இருக்கிறேன்."
கூகுள் தளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை எம் செம்மொழியான தமிழ் மொழி , தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!...

நாம் கண்டிப்பா பார்த்து பகிர்ந்து கொள்ள வேண்டிய காணொளி .


எமது மண்ணின் கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவியை இனியாக இசை கோர்த்து பாடலாக்கி தருகிறார்  புங்கை பெற்ற மங்கை ப.ரோஹிணி 
பாராட்டுக்கள் .இங்கே அழுத்தவும் 
http://www.facebook.com/photo.php?v=10152404101645720&set=p.10152404101645720&type=2&theater

8 ஜன., 2013

பிபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார் மெஸ்சி
பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்றது.
கால்பந்து அரங்கில் திறமையாக செயல்படும் வீரர்களுக்கு, பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்படுகிறது.

வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் 19 நாட்களின் பின் விடுதலை!- யாழில் சம்பவம்
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா சென்றுள்ள பாடகி “மாயா”(மாதங்கி) “அவுஸ்திரேலியா அரசு தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
“குறைந்த பட்சம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பாது தடுப்பு முகாம்களிலாவது வைத்திருங்கள்” என்பதும் அவரது வேண்டுகோளாக இருந்தது.
அமெரிக்கப் பெரு ஊடகவியலாளர்களுக்குள் முற்போக்கானவராகக் கருதப்படுபவர் "Bill Macher". அவர் ஆங்கிலத்தில் பாடும் தமிழ் பாடகி "மாயா" (மாதங்கி) உடன் இலங்கைப் பிரச்சினை குறித்து உரையாடுகின்றார்.


சென்னை நோக்கியா தொழிற்சாலையில் சோதனை

சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள நோக்கியா தொழிற் சாலையில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு
 மதுரை ஆதினம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நித்தியானந்தா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் : விஜயகாந்த்
ஏழைகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்குமாறு தேமுதிக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’சமுதாய நல்லிணக்கத்தைப் போற்றும்

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்போம் :
இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

 
கனடா அமைச்சர் ஜேசன் கென்னடி இலங்கை தலைநகர் கொழும்பு வந்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

விஸ்வரூம் ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிப் போனது

சென்னை: பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த விஸ்வரூபம் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வரும் ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களில் நேரடியாக வெளியிடுவது என

திவிநெகுமவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்

கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு: நல்லூரில் சம்பவம்

யாழ். நல்லூர் பிரதேசத்தில் உள்ள கிணறிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் மேர்வினின் செயலாளர்கள் இருவரும் உள்ளடக்கம்!


களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்க

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து பீடங்களுக்குமான விரிவுரைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழக உப வேந்தர் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில்

யாழ்ப்பாணத்தில் 2 ஆண்டுகளில் 207 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 207 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை புள்ளி விபரங்களூடாகத் தெரிய வருகின்றது என

திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் 107 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.சட்டமூலத்திற்கு எதிராக ஐ.தே.க, த.தே.கூ, ஜே.வி.பி. ஆகிய வாக்களித்தன.

தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிக்க இராணுவத்தை அனுமதித்து, மறுக்கப்பட்டமையின் பின்னணியில் மர்மங்கள் : சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள்


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிப்பதற்கு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பின்னணியில் மர்மமான பல காரணங்கள் பல இருப்பதாக சில ஆசிரியர்கள்

சவால் விட முடியுமா?
ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏ கேள்வி!
சங்கரன்கோவில் இடைதேர்தல் போல், லோக்சபா தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதா சவால் விட முடியுமா? என, தே.மு.தி.க., எதிர்கட்சி
சேவை வரிக்கு எதிரான தமிழ் திரையுலகினரின் உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. இந்த உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

7 ஜன., 2013

சென்னை வந்த அழகிரி, தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குச் செல்லத் திட்டமிட்டார்.

இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவல


நடிகர்கள் உண்ணாவிரதம் :சினிமா காட்சி ரத்து

மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை நீக்கக் கோரி, சென்னையில் இன்று நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ரஜினி, கமல், சரத்குமார் உட்பட, திரையுலகின் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்

அரசு இப்படி செய்வதால்
கருப்பு பணம்தான் அதிகரிக்கும் :
ரஜினி பேச்சு
 


மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

ad

ad