புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2013


உதயன் விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்பத்திரிகைகள் தீக்கிரை

சம்பவத்தில் படுகாயமடைந்த பா.பிரதீபன் என்ற பணியாளர் மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ். வல்வெட்டித்துறை மார்க்கத்தில் பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்ட மற்றொரு பணியாளர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்முயற்சியில் இருந்து தப்பிய பணியாளர் பத்திரிகைகளை வழியில் கையளித்துவிட்டு வல்வெட்டித்துறைப் பொலிஸில் அடைக்கலம் கோரியுள்ளார்.
உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல்! பத்திரிகைகளும் எரிப்பு
உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் யாழ். வடமராட்சி, மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப் பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவரின் தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்துள்ளார். எனினும் அவர்களது தாக்குதல் கைப்பகுதியில் பலமாய் விழுந்ததினால் அவரது கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவரை அருகில் உள்ள கானுக்குள் தூக்கி வீசிவிட்டு மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகளை எரித்து விட்டு நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் என்பவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்று காலை மற்றுமொரு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளார்..
ஆயினும் அவர் தன்னைப்பாதுகாத்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad