புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013



நடிகர்கள் உண்ணாவிரதம் :சினிமா காட்சி ரத்து

மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை நீக்கக் கோரி, சென்னையில் இன்று நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ரஜினி, கமல், சரத்குமார் உட்பட, திரையுலகின் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்
.திரையுலகத்தினருக்கு, கடந்த ஆண்டு, ஜூலை மாதத்திலிருந்து, 12.3 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி கட்டாதவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வரியால், பெரும் பாதிப்பு ஏற்படும் என, திரையுலகினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.இவ்வரியை நீக்கக் கோரி, சினிமா, "டிவி' நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகின் அனைத்து சங்கங்களின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இன்று காலை, 9:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, உண்ணாவிரதம் நடக்கிறது.

உண்ணாவிரதத்தில் பங்கேற்க அனைத்து சினிமா சங்களின் சார்பில், தனித்தனியாகவும், உண்ணாவிரதப் போராட்ட குழுவின் சார்பில் பொதுப்படையாகவும் அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது.

உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களில், இன்று காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது; படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ad

ad