புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013

சென்னை வந்த அழகிரி, தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குச் செல்லத் திட்டமிட்டார்.

இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவல
கத்துக்குச் சென்றுவிட்டாராம். பிறகு அங்கிருந்து புறப்பட்டு அறிவாலயத்துக்குச் சென்று சிஐடி நகர் வீட்டுக்குச் சென்று விட்டாராம். அதற்குப் பிறகு மாலையில் கோபாலபுரம் வீட்டுக்கு அழகிரி நேரடியாகச் சென்றுள்ளார்.

ஆனால், கருணாநிதி, அதற்கு முன்னே புறப்பட்டு அண்ணாநகரில் உள்ள பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அன்பழகனோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு சிஐடி நகர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

கோபாலபுரம் வீட்டில் தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, மு.க.அழகிரி மட்டும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அழகிரி தன் ஆதங்கத்தை தயாளு அம்மாளிடம் தெரிவித்துவிட்டுச் சென்றாராம்.

நன்றி தினமணி

தலைவருக்கு வீடு "கள் " / அல்வலகங் கள் / தலைவர் கள் இருப்பதால் எவ்வளவு வசதி

ad

ad