புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2013


திவிநெகுமவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடர் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற குழுவிற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, திவிநெகும சட்டமூலத்திற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த திருந்தங்களை ஏற்கொண்ட அமைச்சர் பசில் அடுத்த மூன்று மாதங்களிற்குள் இந்த திருத்தங்களை திவிநெகும சட்டமூலத்திற்கு உள்ளடக்குவதாக உறுதியளித்துள்ளார்.அத்துடன் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இதனையடுத்தே திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.இதேவேளை, திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுகாற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

.

ad

ad