புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2013


தற்கொலை செய்து கொண்ட 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் : விஜயகாந்த்
ஏழைகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்குமாறு தேமுதிக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’சமுதாய நல்லிணக்கத்தைப் போற்றும்
வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் பண்டிகைகளை மக்களுடன் இணைந்து தேமுதிக கொண்டாடி வருகிறது. உழைக்கும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் பண்டிகை.
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தான் அரசாங்கம் உள்ளது. ஆனால், இன்றைய அரசின் தவறான அணுகுமுறையாலும், மத்திய அரசுடனும், அண்டை மாநிலங்களோடும் சுமுகமான உறவு இல்லாததாலும் காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை.
காவிரியில் இருந்து எந்த அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்தால் விவசாயிகள் பயிர் சாகுபடியைக் குறைத்து கடன் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருந்திருப்பார்கள். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகளை செய்வதுதான் மனிதாபிமானம் ஆகும்.தேமுதிக சார்பில் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரில் வரும் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்படும்.
 இவ்விழாவில் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். இதுபோல மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் ஏழைகளுக்கு பொங்கல் பொருள்களை வழங்க வேண்டும்’’ என  கொண்டுள்ளார்.

ad

ad