புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013

புத்தாண்டில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் 2013ம் ஆண்டில் ஜனவரி முதல் நாளிலிருந்து பல புதிய சட்டங்கள் அறிமுகமாகின்றன.
இவை சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்குத் துக்கத்தையும் தருவது உறுதி.

திருமணம் உறுதி செய்யப்பட்டவர்களுக்கும், சூதாட்டக்காரர்களுக்கும் புதிய சட்டங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
ஆனால் குழந்தைகளோடு வன்புணர்ச்சியில் ஈடுபடும் கொடியவர்களுக்கு இச்சட்டம் துன்பத்தைத் தரும்.
2013ம் ஆண்டு முதல், பெண்கள் திருமணமான பின்பு தனது கணவரது பெயரைத் தனது பெயருடன் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
பெயரை மாற்றியிருந்தவர்கள் 75 சுவிஸ் பிராங்க் கட்டணத்தில் பழைய பெயரைப் பெறலாம்.
பரிசுக் குலுக்கலில் பயன் பெற்றோர் இனி வரிகட்டுவது குறைகிறது.
இதுவரை ஐம்பது சுவிஸ் ஃபிராங்க் பரிவு பெற்றவர் கூட அரசுக்கு வரி செலுத்தி வந்தனர்.
இனி ஆயிரம் சுவிஸ் ஃபிராங்க் பரிசு பெற்றவர் கூட வரி கட்ட வேண்டியவில்லை.
அதற்கும் அதிகமான தொகையைப் பரிசாகப் பெற்றால் மட்டும் வரி செலுத்த வேண்டும்.
இதுவரை சுவிட்சர்லாந்தில் எந்தப் பொருள் வாங்கினாலும் ஒரு வருட உத்தரவாதம் தான் அளிக்கப்பட்டது.
இனி மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல இரண்டு வருட உத்தரவாதம் உற்பத்தியாளரால் நுகர்வோருக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad