-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

11 ஜன., 2013சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு கழுத்து வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.

ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை கேட்டு தான் உண்மையில் கலக்க முற்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பொறுப்பு தலைமை அதிகாரி கெத்தரின் ஏஸ்டன் தெரிவித்துள்ளார்.
ரிசானாவை மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் சவுதி அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாக கெத்தரின் ஏஸ்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றம் இடம்பெற்ற வேளையில் ரிசானா ஒரு சிறிய பெண் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரிசானாவின் மரணத்திற்காக அவரது குடும்பத்தினருக்கு, குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கும் அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ரிசானாவின் மரணத்தால் குழந்தையின் பெற்றோரின் இழப்பு குறைக்கப்படும் என தான் நம்பவில்லை எனவும் கெத்தரின் ஏஸ்டன் குறிப்பிட்டுள்ளார்

விளம்பரம்