புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2013


இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகளைக் கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப்
பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அறிமுக வீரரான பிலிப் ஹியூக்ஸ் 112 (129 பந்.) ஓட்டங்களையும் ஆஸி அணியின் தலைவர் ஜோர்ஜ் பெய்லி 89 (79 பந்.) ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மெண்டிஸ், மெத்தியூஸ், குலசேகர மற்றும் மலிங்க ஆகியோர் தல ஒரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் 306 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கையணி 8 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தரங்க ஒரு ஓட்டத்தையும் அணி 18 ஓட்டங்களைப்பெற்றபோது மஹேல ஜயவர்தன 5 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
நிதானமாக ஆடி டில்சான் 51 (70 பந்.) மற்றும் சந்திமல் 73 (95 பந்) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். இலங்கை அணியின் விக்கெட்டுகள் விரைவாக சரியத்தொடங்க 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 107 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணிசார்பாக மெக்காய் 4 விக்கெட்டுகளையும் ஜோண்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் ஹியூக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

ad

ad