புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2013


காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்போம் :
இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

 
கனடா அமைச்சர் ஜேசன் கென்னடி இலங்கை தலைநகர் கொழும்பு வந்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,


’’போருக்கு பின்னரும் கூட இலங்கையில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் நீடிப்பதாக கனடா கருதுகிறது. இலங்கையில் இருந்து ஆஸ்திரலியா, கனடா போன்ற நாடுகளில் சென்று குடியேறும் ஆசையில் பெரும் பணம் செலவழித்து சட்டவிரோத ஆள்கடத்தல் கும்பல்களிடம் பலர் தொடர்ந்து சிக்குகிறார்கள்.


ஏனெனில் அவர்களை அந்த நிலைக்கு தள்ளுகின்ற ஒரு அரசியல் சூழல் இலங்கையில் நிலவுகிறது என எனக்கு புரிகிறது. போர் காலத்தைவிட இலங்கையில் இருந்து வெளி யேறி வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது எனக்கு கவலையை ஏற்படுத்துகிறது. எனவே இலங்கை யில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தா விட்டால் இங்கு நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் புறக்கணிப்பார்’’என்று கூறினார்.

ad

ad