புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013

ண்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரங்களை வெறும் 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார் அப்புக்குட்டி என்பவர்.

இந்த அப்புக்குட்டி, சென்னிமலை ஒன்றிய சேர் மன் அ.தி.மு.க. கருப்புசாமி யின் பினாமி.

சேர்மன் கருப்பு சாமிக்கு, விஸ்வரூப பாது காப்பாக இருப்பது யார்? ""வேறு யார்? நம்ம பொதுப்பணித்துறை மாண்புமிகு கே.வி.ராமலிங்கம் தான்!'' என்கிறார்கள் ஈரோடு மாவட்டம், சென்னி மலை ஒன்றியம், பாலத்தொழுவு ஊராட்சி யின் தலைவரும்
, மக்களும் மற்றும் சர்வ கட்சியினரும்.nakieran

ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளி சென்னி மலை சாலையில் உள் ளது பாலத்தொழுவு ஊராட்சி. இந்தப் பாலத்தொழுவு கிராம ஏரியின் பரப்பளவு 433 ஏக்கர். 

1985ஆம் ஆண்டு, சமூகக் காடு வளர்ப்புத் திட்டத்தில், இந்த 433 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் கருவேல், செவ்வேல், வேம்பு, புங்கை, ஈட்டி, பீயன் மரங்களை நட்டு வளர்த்தார்கள்.

அத்திக்கடவு- அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வடிகால் பகுதியான பாலத்தொழுவு ஏரி நீர்ப்பிடிப்பில் பாலத்தொழுவு ஊராட்சி மக்களின் அரவணைப்பில் கொழு கொழுவென வளர்ந்தன மரங்கள். 28 வயது நிரம்பிய இந்தச் சமூகநல வாலிப வனத்தில் பல்லாயிரக்கணக்கான மயில்கள், ஆயிரக்கணக்கான மான்கள், முயல்கள், உடும்புகள், பல லட்சம் பறவைகள் என குதூகல வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றன. 

""பாலத்தொழுவு ஏரிக்கு, நீர்வரத்துப் பாதைக்காக முட்புதர்களை சுத்தம் செய்கிறோம்!'' என்ற நொண்டிக் காரணத்தைச் சொல்லி, இந்த 433 ஏக்கர் சமூகநலக் காட்டையும், ஏலத்தில் விட்டது பொதுப்பணித்துறை.

25-10-2012 அன்று நடந்த இந்த ஏலத்தை 85 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்தார் சென்னிமலை யூனியன் சேர்மன் கருப்புசாமியின் சுட்டு விரலான அப்புகுட்டி என்பவர்.

இந்த ஏலத்தை, அடுத்த சில நாட்களில் மறு ஏலம் விட்டது சேர்மன் கருப்பசாமி-அப்புக்குட்டி அணி. மறு ஏலத்தை 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்தார் சேர்மனின் நிழலான நந்தகுமார்.
""விஷயம் என் காதுக்கு வந்ததும் என் வயிறெல்லாம் எரிஞ்சது. எழுபது, எண்பது கோடிக்கு போற மரங்களை, பொதுப்பணித்துறை மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை, இப்படிக் கள்ளக் கணக்கு காட்டி சுருட்டு றாங்களே... இந்த தப்பான செயலை பொ.ப.துறை அமைச்சர் ராமலிங்கம் கவனத்துக்குக் கொண்டு போனேன். அவர் கண்டுக்கலை. இது என் ஊராட்சி நான் எப்படி சும்மா இருக்க முடியும். உடனே வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் சென்றோம். அவருக்கும் ஆத்திரம்தான். அந்த ஏலத்தை கேன்சல் செய்ய முயன்றார். அதற்குள் "இது என் டிபார்ட்மெண்ட். நீங்க உங்க வேலையைப் பாருங்க' என்று ராமலிங்கம் சொல்லிவிட்டாராம். வெங்கடாசலம் ஒதுங்கிக் கொண்டுவிட்டார். இதற்கிடையில், சேர்மன் கருப்புசாமி என்னை மிரட்டினார். இந்த 80 கோடி ஊழல் ஏலத்தை கேன்சல் செய்யணும்னு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி யிருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!'' என்கிறார் பாலத்தொழுவு ஊராட்சி மன்றத்தின் தலைவர் செல்வகுமார்.

ஆனால், இதற்குள் சுமார் 4 ஏக்கரில் நின்ற மரங்கள் வெட்டப்பட்டு, லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

""இந்த 4 ஏக்கர்ல வெட்டுன மரங்களோட மதிப்பே 40 லட்சம் இருக்குமுங்க. அய்யோ... மோசடி மோசடி மெகா மோசடிங்க. கண்ணுக்கு முன்னாடி அயோக்கியத்தனம் நடக்குது. தடுக்க முடியலை. ஒரு பக்கத்தில் இருந்து வனம் அழிப்பு. இன்னொரு பக்கம் மயில் வேட்டை, மான் வேட்டை, முயல் வேட்டை. வேட்டையாடுவதற் காகவே ஒரு பெரிய கும்பலை இறக்குமதி செய்திருக்கிறார்கள்!''. -இதைச் சொன்னவர் தி.மு.க.வைச் சேர்ந்த வள்ளி.இளங்கோவன்.

""சேர்மனும், அமைச்சரும், அதிகாரிகளும் சேர்ந்து செய்ற கூட்டுக் களவாணித் தனமுங்கோ இது. கின்னஸ்ல ஏத்தலாம்ங்கோ. அமைச்சர் பதவியில் இருந்து கே.வி.ராமலிங்கத்தை நீக்கணும். அதுக்காக நாங்க நிச்சயம் போராடுவோம்!'' -இது இளைஞர் காங்கிரஸ் தங்கவேல்.

நாம் செய்தி சேகரித்துக் கொண்டிருப்பதை அறிந்து நம்மைச் சந்திக்க வந்தார் பாலத்தொழுவு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் நடராஜன். ""எந்தக் கட்சிக்காரன் செஞ்சாலும் தப்பு தப்புத்தானுங் களே... இது என் ஊருங்க. 80 கோடியை 80 ஆயி ரம்னா இது அடுக்குமுங்களா? உள்ளூர்க்காரன்னா ஒண்ணும் தெரியாதவனா? சேர்மன் கருப்புசாமி யிடம் போய் நியாயம் கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுங்களா? "மினிஸ்டர் கே.வி.ஆர். ஒரு கோடி கேக்குறாரு. நீ கொடுக்கிறி யா'னு கேட்டாருங்க. நான் எதுக்காக கொடுக்கணும்னு கேட்டேன். வாயை மூடுனு சத்தம் போட்டாருங்க. இதை நாங்க வேடிக்கை பார்க்க மாட்டோம். எப்பாடு பட்டாவது அம்மாவை சந்தித்து இந்த 80 கோடி அயோக்கியத்தனத்தை சொல்வோம்!'' -கொதிப்போடு சொன்னார். இந்த விஷயத்தில் பொ.ப.துறை எப்படி கண்களை மூடிக் கொண்டது? பொ.ப.துறை மாவட்ட அதிகாரி (எஸ்.டி.ஓ.) செல்லமுத்துவைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

""மரங்களை வெட்ட மாட்டார்களே! நாங்கள் முறைப்படி, முட்புதர்களைத் தானே ஏலம் விட்டோம். மரங்களை வெட்டினால் தப்புதான்!'' என்றார் அவர்.

சென்னிமலைச் சேர்மன் கருப்பு சாமியிடம் நாம் கேட்டதற்கு ""அத்தனையும் பொய். அமைச்சர் பணம் கேட்டார்... அது இது என்று யார் சொன்னாலும் நம்பாதீர் கள். முள்செடிகளின் மேல் பகுதியைத்தான் வெட்டுவார்கள். பயன் தரும் மரங்களை யாராவது வெட்டுவார்களா?'' என்று நம்மையே திருப்பிக் கேட்டார் சேர்மன் கருப்புசாமி.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நின்ற கருவேல, செவ்வேல மரங்களை புல்டோ சரை பயன்படுத்தி வேரோடு பிடுங்கியதற்கு சாட்சியாக நாம் காட்டிய புகைப் படங்களை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் ஒப்புக் கொள்ள தயாராக இல்லை.

பிரச்சினையில் நக்கீரன் தலையிட்டவுடன் மரங்களை வேரோடு பிடுங்குவதையும், வெட்டு வதையும் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.                 

ad

ad