புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013


           சேவை வரி விதித்திருக்கும் மத்திய அரசை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7-ந்தேதி தமிழ்த்திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

சேவை வரி என்றால் என்ன?


நீங்கள் ஒரு ஹோட்டலுக்குப் போய் ரெண்டு இட்லி கெட்டிச்சட்னி சாப்பிட்டு விட்டுப் போய் விடுவீர்கள். இட்லி சாப்பிட்ட உங்களை அரசால் தேடிக் கொண்டி ருக்க முடியாது. இட்லியை தந்து உங்களுக்கு சேவை செய்த ஹோட்டல் நிர்வாகம் வரியை மொத்தமாக அர சிடம் கட்டும். உங்கள் பில்லில் மறைமுகமாக இந்த வரி வசூலிக்கப் படும்.
nakieran

மருத்துவம், டியூஷன் சென்டர் உட்பட 120 பிரிவு களுக்கு சேவை வரி உண்டு. அதில் சினிமாவும் ஒன்று.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது சேவை வரி லிஸ்டில் சினிமாவும் வந்தது. வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்கள் 10.3 சதவிகிதம் சேவை வரி கட்ட வேண்டும்.

இதற்கு முதன்முதலாக எதிர்ப்பு கிளப்பியவர் பாலிவுட் நடிகையும், "மயிலு' ஸ்ரீதேவியின் கொழுந்தன் மகளுமான சோனம் கபூர்.


""எங்களோட தோள் மேல கூடுதல் சுமையை ஏத்துது இந்த சேவை வரி விதிப்பு. சினிமா கலைஞர்களின் உழைப்பை அரசாங்கம் உறிஞ்சுவதா? சினிமாக்காரர் கள் கோடி கோடியாய் பணத்தை வைத்துக் கொண்டு அதில் புரளுகிறவர்கள்... என பாமர மக்கள் நினைக்கிறாங்க. அரசாங்க மும் அப்படி நினைக்கிறது ரொம்ப அபத்தமா இருக்கு'' என டுவிட்டரில் சுளுக்கெடுத்தார் சோனம் கபூர்.

தொடர்ந்து அமிதாப் தொடங்கி அனைவரும் எதிர்த்தனர். ஷூட்டிங்கை நிறுத்தி, தியேட்டரை மூடி ஒருநாள் ஸ்டி ரைக்கும் பண்ணி னார்கள். சேவை வரி விதித்த அப் போதைய நிதி யமைச்சர் பிர ணாப் முகர்ஜியை சந்தித்து பாலிவுட் புள்ளிகள் கோரிக் கை வைத்தனர்.

"பரிசீலிக்கிறோம்' என சினிமா சேவை வரியை கொஞ்சநாள் கிடப்பில் போட்டது அரசு. ஆனால், தற்போது 10.3 சதவிகிதமாக இருந்த சேவை வரியை 12.36 சதவிகிதமாக உயர்த்தி மண்டை காய விட்டு விட்டது மத்திய அரசு.

நொந்து போன பாலிவுட் சினிமாப் புள்ளிகள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து சேவை வரியை செலுத்த ஆரம்பித்தனர்.

இப்படிப்பட்ட நிலை யில் தாமதமாக... சேவை வரி எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருக்கிறது கோலிவுட்.

"அரசுக்கு வரி கட்டுவது தேசத்திற்கு ஒரு குடிமகனாக நான் செய்கிற சேவை!' எனச் சொல்லிவரும் கமல் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. "கலைச் சேவை செய்றம்னுதான் சொல்லிக்கிறாங்க. அதுல சம்பாதிக்கும் பணத்தில் வரி கட்ட வேண்டியதுதானே? சம்பாதிக்காதவங்க கிட்டவா வரி கேட்கிறாங்க?' என கேள்வியெழுப்பி அஜீத்தும் இந்த போராட்டத்திற்கு வரவில்லை. முன்னணி நடிகைகள் பலரும் கூட வரவில்லை.

ஆனால் கவனம் ஈர்க்கும் விதமாக ரஜினி வந்தார்.

""வருமான வரி ஏய்ப்பு செய்றவங் களை கண்டுபிடிச்சு வசூல் பண்ணுங்க. இப்படி வரிக்கு மேல் வரி போட்டா கருப்புப் பணம் பெருக காரணமாயிடும்!'' எனப் பேசினார் ரஜினி.

ஏற்கனவே சினிமா உலகம் கேளிக்கை வரி கட்டுது. நட்சத்திரங்கள் வருமானவரி கட்றாங்க. இது போதாதுனு சேவை வரி வேறயா? என வருமானவரித்துறை அதிகாரி களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""சினிமாக்காரர்கள் பெரும்பாலும் வரி ஏய்ப்பு செய்கிறவர்களாகத்தான் இருக்காங்க. அவங் களோட சம்பாத்தியத்தில் 60 சதவிகிதத்தை கருப்புப் பணமாவே வாங்குறாங்க.

ஒவ்வொரு கலைஞரும் எவ்வளவு வாங்கு றாங்க? என்கிற விபரம் எங்களுக்கு கிடைக்கும். ஆனா அவங்க சப்மிட் பண்ற டாகு மெண்ட்ஸ்ல ரொம்ப குறைவா இருக்கும். இதனாலதான் நாங்க அடிக்கடி ரெய்டு நடத்த வேண்டியிருக்கு.

ரஜினி, அஜீத் கணக்குகள்ல சில டவுட் இருந்ததால் அவங்க வீடுகளில் கூட வெரிஃபி கேஷன் பண்ணியிருக்கோம். எஸ்.ஜே.சூர்யா வீட்டில் ஒரு கோடி ரூபாய் ரொக்கமா கைப் பத்தியிருக்கோம். சரத்குமார்- ராதிகா வீட்டி லும் சோதனை நடத்தியிருக்கோம். விஜய் வீட்டில் ஒருமுறை ரெய்டுக்கு போனப்போ ப.சிதம்பரத்தின் பேரைச் சொல்லி மிரட்டி னாங்க. நாங்க அசரலை. கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளிலும் ரெய்டு பண்ணியிருக்கோம். 2011 ஜூலையில் மம்முட்டி, மோகன் லால் வீட்ல சோதனை செஞ்சோம். அப்போ பயோமெட்ரிக்... அதாவது மோகன்லாலின் விரல் ரேகை பட்டால் மட்டுமே திறக்கக்கூடிய லாக்கர் இருந்தது. அதை சோதனை பண்ணியதில் கணக்கில் வராத பலகோடி பணமும், யானை தந்தங்களும் இருந்தன. தந்தம் பதுக்கியதுக்காக அவர் மேல வழக்கு உள்ளது. நடிகை அனுஷ்கா சம்பாத்யம் குறித்து அடிக்கடி தகவல் வரும். ஆனா அவர் சப்மிட் பண்றது வேற மாதிரி இருக்கும். இதனால் பல முறை அவர் வீட்டில் ரெய்டு பண்ணிருக்கோம். அனுஷ்கா பற்றிய விபரங்களை ஆந்திர சினிமாப் புள்ளிகள் எங்களிடம் போட்டுக் கொடுப்பதாக நினைத்து அவர்கள் மீது அனுஷ்காவுக்கு வருத்தமும் உண்டு.

"கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் 14 கோடி சம்பாதித்ததாக கணக்கு காட்டியிருந்தார் அமிதாப் பச்சன். ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் 56 கோடி சம்பாதித்ததாக எங்களுக்கு எவிடன்ஸ் கிடைத்தது. இந்த விஷயம் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கு.

பதுக்கிய கருப்புப் பணம் பிடிபட் டாலும் குறைந்த அளவே ஃபைன் அதனால் பதுக்கல் தொடருது. சேவை வரி மூலம் அதில் கொஞ்சம் மீட்பது தான் நோக்கம். 2012-2013 நிதியாண்டில் "Business Auxiliary Servi    ces'  அதாவது வணிக துணை சேவை வரிகள் மூலம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர் ணயிச்சிருக்கு!'' என் றார்கள் அதிகாரிகள்.

சினிமா கலைஞர் கள் மீதான சேவை வரியை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ரஜினி தலைமையில் 13-ம் தேதி சந்திக்க திரையுலகினர் திட்டமிட் டுள்ளனர். ""திரையுலகினரின் கோரிக் கையை கேட்டு அவர்களை சமா தானப்படுத்துவாரே தவிர சேவை வரி விதிப்பை திரும்பப் பெறும் உத்தரவாதம் தரமாட் டார். சினிமா சேவை வரியை ரத்து செய்தால் சேவை வரிகட்டுகிற மற்ற தொழில் செய்யும் மக்கள் அதிருப்தி யாவார்கள்... என்பதால் அதில் தெளிவாக இருக்கிறார். இருப்பினும் வரிவிதிப்பின் சதவிகிதத்தை குறைக்க வாய்ப் பிருக்கிறது'' என்கிறார்கள் அமைச்சர் வட்டாரத்தில்.

சேவை வரி எதிர்ப்புக் குழுவில் இருக்கும் கேயாரிடம் பேசினோம். ""94-லிருந்து சினிமாவுக்கு சேவை வரி முயற்சிகள் நடந்து இப்பதான் அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்த ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா முடிவெடுத்ததும் பிரணாப் அழைத்து, தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு சேவை வரியில் விலக்கு அளித்தார். அதனால் எங்களுக்கு பாதிப்பில்லை. சினிமாவில் பிரபலமாகி விளம்பரங்களில் நுகர் பொருட்களை பிரபலப்படுத்தும் நட்சத்திரங்களிடம் சேவை வரி வாங்கலாம். 

மற்ற நட்சத்திரங்களிடம் வாங்கினால் யாருக்கு பாதிப்பு?

ஒரு ஹீரோ அஞ்சு கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு 65 லட்ச ரூபாய் சேவை வரி விதிக்கப்படும்! இனிமேல் அந்த ஹீரோ ஆறு கோடியாக கொடுங்க என தயாரிப்பாளர்களிடம் சுமையை ஏற்றுவார். தயாரிப்பாளர் அந்த சுமையை விநியோகஸ்தரிடம் தூக்கி வைப்பார். அவர் தியேட்டர்காரர்களிடம் தூக்கி வைப்பார். அப்புறம்?'' எனச் சிரிக்கிறார் கேயார்.

ஏற்கனவே ஹீரோக்களுக்கு கட்-அவுட், பாலாபிஷேகம் என சேவை செய்யும் ரசி கன் கூடுதல் டிக்கெட் கட்டணம் மூலம் சேவை வரியையும் கட்டுவான்.

-தாமோதரன் பிரகாஷ் -இளையசெல்வன்

ad

ad