-
15 ஜூலை, 2013
யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பினில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது.இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டினில் கூட்டமைப்பின் சார்பினில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம்இ பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
14 ஜூலை, 2013
இன்று யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரியில் புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நிகழ உள்ளது
தலைவர் .கா.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்
நூல் அறிமுக உரை .ந.தர்மபாலன் முன்னாள் அதிபர் புங்.ம.வி
வாழ்த்துரை பேராசிரியர் வி.சிவசாமி ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன்
முதல் பிரதி பெறுவோர் திரு சிவா நற்குண சங்கர்
நன்றியுரை தர்மகுனசிங்கம் முன்னாள் அதிபர் புங் ம வி
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நிகழ உள்ளது
தலைவர் .கா.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்
நூல் அறிமுக உரை .ந.தர்மபாலன் முன்னாள் அதிபர் புங்.ம.வி
வாழ்த்துரை பேராசிரியர் வி.சிவசாமி ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன்
முதல் பிரதி பெறுவோர் திரு சிவா நற்குண சங்கர்
நன்றியுரை தர்மகுனசிங்கம் முன்னாள் அதிபர் புங் ம வி
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
காணாமல் போனோர் காணோமல் போனவர்களே! புதிய அரசியல்வாதி தயாமாஸ்டர்!!முன்னதாக அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சி குழுமத்தினில் இருந்து அரசியல் நடவடிக்கைகளிற்காக வெளியேறுவதாக அதன் பணிப்பாளர் எஸ்.குகநாதன் அறிவிப்பை விடுத்திருந்தார்.
கனடா கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!- கனடிய பா.உ. ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.
யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013யேர்மனியில் நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இலங்கைத் தலைவர்கள் இருவரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும்! ‘சனல்4’ பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என ‘சனல் 4’ தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு
13 ஜூலை, 2013
தர்மபுரியில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இளவரசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனைக் கணக்கில் வைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கணக்கில் கொண்டும் அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியரே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் 144 தடை அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு: எய்ம்ஸ் டாக்டர் குப்தா
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளவரசனின் உடல் மறுபரிசோதனை செய்யப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுபரிசோதனை செய்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் பரத்வாஜ், கபிர்குமார், குப்தா, மேலோடெபின் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மறுபரிசோதனைக்குப் பின்னர் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளவரசனின் உடல் அனைத்து கோணத்திலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது என்று டாக்டர் குப்தா தெரிவித்தார். மறுபரிசோதனை அறிக்கையை சீல் வைத்து உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் துணைத் தூதரகம் தாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்தாகவும், சென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை துணைத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 ஜூலை, 2013
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் மினி பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.
இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் யார்?
தர்மபுரி இளவரசனின் உடல் ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர் குழுவின் அடிப்படையில் இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.கடந்த முறை பிரேத டாக்டர்கள் அல்லாமல் வேறு டாக்டர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும், அந்த டாக்டர்கள் யார் என்றும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புலிகள் தலைமையின் அதி நவீன புதிய வாகனத்தால் அரசிடம் கலக்கம்! குழப்பம்!
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வான்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக வானின் புகைப்படங்கள். அன்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் அரிய பல வியக்க வைக்கும் தடயப் பொருட்கள் வெ
11 ஜூலை, 2013
http://pungudutivukalikovil.blogspot.ch/2013/07/blog-post.html
தற்போது நடைபெற்று வரும் புங்குடுதீவு காலி கோவில் மகோற்சவ விழா மற்றும் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப திறப்புவிழாவும் காட்சிகள் சில
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க.!- சாடுகிறார் வைகோ
[விகடன் ]
ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க. ஆனால், தமிழகத்திலே மாணவர்களின் கொந்தளிப்பு தங்கள் பக்கம் திரும்பியதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள் அவர்கள்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல்
வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என்று தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.
10 ஜூலை, 2013
யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது! கட்சியிலிருந்து நீக்கம்!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கொள்ளைகள் மற்றும் கப்பங்கோரல்கள் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை இவர் முன்னின்றி வழிநடாத்தி வந்துள்ளார்.
யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
பல வர்த்தகர்களிடம் பணம் தவிர பல பவுண் நகைகளையும் இவர் பறித்து எடுத்துள்ளார். மேலும் உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் நாசம் செய்துள்ளதாக
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு புதன்கிழமை (10.07.2013) முடிவடைகிறது. ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.
தேமுதிவில் இருந்து சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), தமிழழகன் (திட்டக்குடி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண் பாண்டியன் (பேராவூரணி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி (சேந்தமங்கலம்), மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகிய 7 உறுப்பினர்கள், முதல்
உதயன் பத்திரிகைக்கு எதிரான டக்ளஸின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்ட யாழ். நீதிமன்றம்
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா
9 ஜூலை, 2013
லண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை சிங்கள வைத்தியர் மாட்டினார்!
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறி
இலங்கை மாணவியின் உயர்கல்விக்கு உதவிய நடிகர் சூர்யா
தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்கல்விக்கு தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா உதவி செய்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா என்ற மாணவி பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.
அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம் கூறினார்.
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது.
அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.
தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அழுத்தங்களின் காரணமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் செயற்படும் அரசாங்கம் மறுபுறம் நீதிமன்ற அதிகாரத்தின் மூலமாக தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கின்றது. அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசங்களிற்கும் தெரியப்படுத்துவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
சுவிஸ் பேர்ண் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
வீரமிகு விடுதலைப் போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் நேற்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
8 ஜூலை, 2013
,
சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி, தமிழீழம் 5 : ரேசியா 0
ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதைபந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateiaஅணியுடன் மோதினார்கள்
,
கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட
,
"எங்க ரெண்டுபேரு கிட்டயும் எந்த மன வேற்றுமையும் கிடையாது... எங்கள் காதலுக்கு எதிரான சக்திகள்தான் நாங்கள் இப்போது பிரிந்து வாழக் காரணம். எப்படியும் திவ்யா என்னிடம் வருவா...' ஜூன் 29- ஜூலை 02 தேதியிட்ட நம் இதழுக்கு இப்படி
,
தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில்
சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம் சார்பில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்
,
இளவரசன் கொலையல்ல தற்கொலையே : கடித ஆதாரம் காட்டும் அஸ்ரா கார்க்
இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை செய்துகொண்டான் என்கிறது அவரது கடிதங்கள்.
,
கமலேஸ் சர்மாவின் முடிவு ஆசியாவில் அராஜகத்துக்கு வழிவகுக்கும்: மங்கள சமரவீர
வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கத்துக்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வழங்கியுள்ள அனுமதி ஆசியாவில் அராஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
,
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டும்: கூட்டமைப்பு
வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்
,
மகளின் காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர்! பெண்ணின் கணவர் மீது கடும் தாக்குதல்! யாழில் சம்பவம்
மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)