புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2013


இளவரசனின் பெற்றோர் உண்ணாவிரதம்
ஐகோர்ட் உத்தரவுப்படி 2 டாக்டர்களும் நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இளவரசன் உடலை ஆய்வு செய்தனர். அப்போது இளவரசன் தரப்பை சேர்ந்த
வக்கீல்கள் ரஜினிகாந்த், செங்கொடி, தமயந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு இருந்தனர். அப்போது வக்கீல்கள் செங்கொடி, தமயந்தி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வெளியே சென்று விட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி. நடராஜ் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் ஆஸ்பத்திரிக்குள் இருந்த வக்கீல் ரஜினிகாந்த் மற்றும் இளவரசனின் தந்தை இளங்கோ, தாய் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். 
அவர்களும் செங்கொடி, தமயந்திக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து இளவரசனின் பெற்றோர் இளங்கோ, கிருஷ்ணவேணி, வக்கீல்கள் ரஜினிகாந்த், செங்கொடி, தமயந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இதில் இளங்கோ-கிருஷ்ணவேணி ஆகியோரை மட்டும் தனியாக ஒரு போலீஸ் வேனில் ஏற்றினர். 
மற்ற 15 பேரையும் மற்றொரு போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். இளங்கோ-கிருஷ்ணவேணியை போலீசார் நத்தம் காலனியில் உள்ள அவர்களது வீட்டருகே இறக்கி விட்டனர். மேலும் வக்கீல்கள் உள்பட 15 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். 
இதுப்பற்றி தெரியவந்ததும் இளவரசனின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன், உறவினர்கள், ஆதரவாளர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் விடிய, விடிய, உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

ad

ad