8 ஜூலை, 2013

புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுதலை
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்ற முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஐதீர தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளுக்கு கடன் உதவிகள் உட்பட அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அமைச்சீனூடாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசிறி கஐதீர, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை யாழ். மாவட்ட பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சதீஸ், அமைச்சின் செயலாளர் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட லரும் கலந்து கொண்டனர்.
இதன் போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை பெற்ற பின்னர் தமக்குள்ள தேவைகள் தொடர்பாக முன்னாள் போராளிகள் கருத்துக்களை வெளியிட்டனர்.
இத்தகைய உதவிகளை செய்ய அமைச்சு வேண்டுமென்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
யுத்தத்தினால் வடக்கு மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்புக்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்.
இழப்புக்களுககான நட்ட ஈடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் எந்த த சட்ட விரோதச் செயல்களிலும் ஈடுபடாது சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ வேண்டும்.
முன்னாள் போராளிகள் திறமையானவர்கள் கிடைக்கும் உதவிகளைக் கொண்டு தமது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வார்கள் என கூறினார்.