புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2013

,

கமலேஸ் சர்மாவின் முடிவு ஆசியாவில் அராஜகத்துக்கு வழிவகுக்கும்: மங்கள சமரவீர
வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கத்துக்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வழங்கியுள்ள அனுமதி ஆசியாவில் அராஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாயத்தின் விழுமியங்களை இலங்கை அரசாங்கம் மதிக்கவில்லை. அதனை பொருட்படுத்தாமல் செயற்பட்டு வருகிறது என்று மங்கள சமரவீர, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளுக்கு நாள், மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
நீதித்துறையின் இடமாற்றங்கள் மற்றும் பதவிகள் யாவும் அலரிமாளிகையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் பல பௌத்த மதக்குருக்களால் தாக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசாங்கத்தின் ஆதரவு காட்டப்படுகிறது.
இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடப்பதற்கு முன்னர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கமலேஸ் சர்மாவிடம், மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

ad

ad