புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2013

யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி  உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பினில்  பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது.இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டினில் கூட்டமைப்பின் சார்பினில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம்இ பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.


கூட்டமைப்பினில் அமைய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும்; சுகாதாரத்துறை மேம்பாடென பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றுள்ளது.இவற்றின் பின்னணியினில் எல்லாம் ஆளும் கட்சி  உறுப்பினர் விஜயகாந்த் இருந்ததாக நாம் சந்தேகிக்கின்றோம்.ஏனெனில் அவர் தன்னை அமைச்சர் டக்ளஸினது தம்பியென கூறி கட்டுப்பாடுகளின்றி திரிந்தார்.அத்துடன் முதல்வரை விட கூடிய அதிகாரத்தையும் சிலவேளைகளினில் அவர் கொண்டிருந்தார்.

மாநகரசபைக்கான அமைய ஊழியர்களை முறையற்று ஆட்சேர்த்தமை மற்றும் நல்லூர் ஆலய உற்சவ கடைகள் பங்கீடு என பல முறைகேடுகளை விஜயகாந்த் நடத்தியதாக தகவல்கள் வெளிவருகின்றன.தற்போது கூட அவர் சிறையினில் அடைக்கப்பட்டுள்ள நிலையினில் நகரின் சுத்திகரிப்பு பணிகள் முடக்கமுற்றுள்ளதாக வெளி உலகிற்கு காட்ட வெளியினிலுள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் முற்பட்டுள்ளார்.

கப்பம் கோரல் மற்றும் கொள்ளைகளினில் ஈடுபட்டு கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ள நிலையினில் ஈபிடிபியிலிருந்து அவரை நீக்கி விட்டதாக கூறுவது வெறும் கண்துடைப்பு.மாநகரசபை முறைகேடுகள்  தொடர்பினில் பக்கசார்பற்ற விசாரணைகள் தேவை.முதல்வர் ஆணையாளர் மற்றும் எதிர்கட்சி அங்கத்தவர்களை கொண்டதாக இவ்விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதேவேளை தற்போது கூட முதல்வரது கொள்ளைகள் தொடர்கின்றன.நல்லூரிற்கு வேலி அடைக்கவென சுருட்டிய 62 இலட்சத்திற்கு என்ன நடந்ததென்பது பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்.பிரிட்டன் புலம்பெயர் பிரஜை ஒருவர் உதவவுள்ளதாக கூறி மக்களது வரிப்பணத்திலிருந்து கடன்பெற்று நல்லூர் கோவிலுக்கு வேலி முதல்வரால் அமைக்கப்பட்டது.ஆனால் இன்று வரை புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்ட இப்பணத்திற்கு என்ன நடந்தென்பது தெரியவில்லையெனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ad

ad