புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2013

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் கடந்த 10ம் திகதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 215 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 280 ஓட்டங்களும் எடுத்தது.
65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 375 ஓட்டங்கள் குவித்தது. பெல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை விட 310 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்தது.
இதனால் 311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது. நேற்றைய 4வது நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பிராட் ஹடின் 11 ஓட்டங்களுடனும், அகர் 1 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 5வது நாள் ஆட்டம் தொடங்கியது. அவுஸ்திரேலியா வெற்றி பெற 137 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கையில் 4 விக்கெட்டுகள் இருந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அகர் 14 ஓட்டங்களில் ஆன்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்டார்க் 1 ஓட்டங்களிலும், சிடில் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
10வது விக்கெட்டுக்கு ஹடின் உடன் பேட்டின்சன் ஜோடி சேர்ந்தார். அப்போது அவுஸ்திரேலியா அணிக்கு 80 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஹடின் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
அத்துடன் அணியை வெற்றிநோக்கி அழைத்து சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பேட்டின்சன் உறுதுணையாக இருந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து ஜெயிக்குமா? அவுஸ்திரேலியா ஜெயிக்குமா? என்று பரபரப்பு மைதானத்தில் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 20 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இடைவேளை முடிந்து அவுஸ்திரேலியா களமிறங்கியது. ஆன்டர்சன் வீசிய முதல் ஓவர் மெய்டனானது. 2வது ஓவரை ஸ்வான் வீசினார். இந்த ஓவரில் அவுஸ்திரேலியாவிற்கு 5 ஓட்டங்கள் கிடைத்தது.
அடுத்த ஓவரை ஆன்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் ஹடின் விக்கெட் காப்பாளரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹடின் 71 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி வரை நின்ற அவரால் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை.
இதனால் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் அன்டர்சன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

ad

ad