புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013




           ர்மபுரி கலவரத்துக்குக் காரணமான காதல் தம்பதிகளான இளவரசனும் திவ்யாவும் சாதீய சக்திகளால் பிரிந்த நிலையில், இளவரசனின் மர்ம மரணம் பலத்த பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  இளவரசன் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை
செய்து கொண்டாரா? என்ற கேள்விக்கான விடையை போலீஸ் தேடிவந்த நிலையில்...

"இது சந்தேகமே இல்லாமல் கொலைதான்' என இளவரசனின் அண்ணன் பாலாஜியும் நண்பர் ஜவஹரும் அடித்துச்சொல்கிறார்கள். ‘""சம்பவத்தன்னைக்குக் காலைல கூட   தன் நண்பன் பாரதியோடும் எங்க அத்தை மகன் அறிவழகனோடும் நல்லாதான் பேசிக்கிட்டிருந்தான். காலைல 11.30-வரை அவங்களோட இருந்தவன் 12.30-க்கு சடலமாயிட்டான். அவன் கிடந்த இடத்தில் மதுபாட்டிலும் பீர் பாட்டிலும் குடிக்கப்படாமல் இருந்தது. அதை வாங்கி வந்தவன், சாவறதுக்கு முன்பாக பயம் தெரியாமல் இருக்க, மதுவை குடிச்சிருக்கணும்ல ஏன் குடிக்கலை? ரயில்ல அடி பட்டால் அவன் உடல் வெகுதூரத்திற்குத் தூக்கி எறியப்பட்டிருக்கணும்.. ஆனால் உடல் அங்கேயே கிடந்தது. தலைப் பகுதியைத் தவிர உடல் அதிக சேதமில் லாமல் இருக்கு. அதனால் அவன் அடிச்சிதான் கொல் லப்பட்டிருக்கணும்’என்கிறார் கள் கண்ணீர் கசிய.  பா.ம.க.வின் முன்னாள் எம்.பி. டாக்டர் செந்திலோ ""தற்கொலை என்பது உணர்ச்சி வேகத்தில் நொடி நேரத்தில் எடுக்கிற முடிவு. ரயில் அருகே வந்த நிலையில் பக்கவாட்டில் குறுக்கேபோய் விழுந்தால், உடல் அருகிலேயே விழ வாய்ப்பிருக்குன்னு பலரும் சொல்றாங்க. இளவரசனுக்கு என்ன எது நடந்திருந்தாலும் மறைக்கமுடியாது. அது எப்படியும் வெளியில் வந்திரும். அது தற் கொலைன்னு பேச்சு அடிபடும்போதும் கூட பா.ம.க. மேலயே குற்றச்சாட்டை வைக்கிறாங்க. இதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. இளவரசனின் இறப்புக்காக நாங்கள் வருந்துகிறோம்''’ என்கிறார் வருத்தம் இழையோட.

இந்த நிலையில் தர்மபுரியிலோ நிமிடத் திற்கு நிமிடம் பதட்ட நிகழ்வுகள் அரங் கேறியபடியே இருந்தன. அடுத்தடுத்து இருமுறை போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டும் அதில் நம்பிக்கை இல்லை என வழக்கறிஞர்கள்  தமயந்தி, ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தைகள் கட்சியினரும் போர்க்குரல் எழுப்ப, பிரச்சினை கள் நீண்டுகொண்டே போனது. இதனால் இளவரசனின் உடலை பெற்றோரிடம் ஒப் படைப்பதில் தேக்கம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது. 

இதற்கிடையே தர்மபுரி வந்த தேசிய ஆதிதிராவிட ஆணையம், தனது விசாரணையை விரிவாக நடத்தியது. நிறைவாக இதன் தமிழகப் பொறுப்பாளர் சிவன்னா, ""இளவரசன் விவகாரத்தில் உண்மைகளை வெளியே கொண்டுவரவேண்டும். கலவரத்தால் பாதிக்கப் பட்ட கிராமப் பகுதிகளில் 80 சத நிவாரணப் பணிகளை செய்துவிட்டதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால் 20 சத பணிகள் கூட அங்கே நடக்கவில்லை. வேதனை அடைகிறோம்''’என்றார் வருத்தமாக. இதற்கு மறுப்பு கூறும்விதமாய் ஜெ.’""பாதிக்கப்பட்ட 326 ஆதி திராவிடக் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 50 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. 99 பசுமை வீடுகள் கட்டித்தர 2 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்  ஒதுக்கப்பட்டு, கட்டுமானப்பணி நடந்துவருகிறது'' என தனது அறிக்கையில் பட்டிய லிட்டுவிட்டு ‘இளவரசன் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேல் தலை மையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படு கிறது’என்றும் தெரிவித்திருக்கிறார். இளவரசனின் அப்பா இளங்கோவனோ ""நீதிபதி சிங்காரவேல் கடந்த காலத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்து கொண்டவர். எனவே அவர் மீது நம்பிக்கை இல்லை. நீதிபதி சந்துருவை நியமிக்க வேண்டும் என ஜெ.வுக்கு புகார்க்கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் 7-ந் தேதி தர்மபுரி எஸ்.பி. அஸ்ரா கார்க், ‘இளவரசன் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதங்கள் எங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது என அறிவித்தார். இந்த நிலையில் ஸ்பாட் விசாரணையில் இறங்கிய நாம், இளவரசன் இறப்பதற்கு முன் அவரை கடைசியாகப் பார்த்த அவரது அத்தை மகன் அறிவழகனை சந்தித்தோம். அவரோ ""இளவரசன் சோகத்தில் இருந்தது உண்மைதான். அன்னைக்கு நானும் அவனது நண்பர் பாரதியும் காலைல அவனோடு பேசிக்கிட்டிருந்தோம். அன்னைக்கு அவங்க அப்பாக்கிட்ட செலவுக்கு இளவரசன் பணம் கேட்டான். அவர் தன் ஏ.டி.எம். கார்டைக்கொடுத்து, அப்படியே அம்மாவிடம் சீட்டுகட்ட 7 ஆயிரம் எடுத்துக் கொடுத்துடுன்னு சொன்னார். அதன்படி தர்மபுரி ஜி.ஹெ.ச்சுக்கு எதிரில் இருக்கும் ஏ.டி.எம்.மில் காலை 10.30-க்கு 9 ஆயிரம் ரூபாயை எடுத்தான். அதில் 7 ஆயிரத்தை வீட்டில் கொடுத் துட்டு, என்னையும் பாரதியையும் அனுப்பி வச்சிட்டு 11.30-க்கெல்லாம் கிளம்பிட்டான். கிளம்பியவன் ஒட்டப்பட்டி டாஸ்மாக் கடைக்கு போய் ஒரு போல்ஸ் குவார்ட்டர் பாட்டிலும் ஒரு லெவன் தவ்சண்ட் பீரும் வாங்கிக் கிட்டு வழக்கம் போல் காலேஜ் பின்பக்கம் இருக்கும் ரயில்வே டிராக் பக்கம் போயிருக்கான். அங்க இருந்து எனக்கு போன் பண்ணி, "நான் சித்தூருக்குப் போய் வேலை தேடப்போறேன். வர்றியா'ன்னு கூப்பிட்டான். "கொஞ்சம் பொறு. நானும் வர்றேன்'னு சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்தில் என்ன நடந்ததோ பிணமாக் கிடக்கிறான்னு தகவல் வருது'' என்றார் கண்ணீர் கசியும் விழிகளோடு. 



இளவரசன் எழுதிய கடிதம்..? என நாம் கேட்க ""நான் தெரிஞ்சிக்கிட்ட வகையில், இளவரசன் பாக்கெட்டில் இருந்த கடிதத்தை, இளவரசனின் சித்தப்பா முறையுள்ள மாணிக்கம்தான் எடுத்திருக்கார். அவருக்கும் இளவரசன் குடும்பத்துக்கும் எப்பவும் ஆகாது. தற்கொலை பண்ணிக் கிட்டாரே திவ்யாவின் அப்பா நாகராஜ். அவருக்கு இவர் நெருங்கிய நண்பர். இவர்தான் இளவரசன்- திவ்யா விசயத்தை, திவ்யா குடும்பத்துக்குப் போட்டுகொடுத்தவர். இளவரசனை வாட்ச் பண்ணி, எதிர்தரப்புக்கு இவர்தான் தகவல் கொடுத்துவந்தாராம். இதை இளவரசனே என்னிடமும் பாரதியிடமும் சொல்லி வருத்தப்பட்டிருக்கான். இளவரசனிடமிருந்து எடுத்த கடிதத்தை எதனாலோ அவர் பதுக்கி வச்சிருக்கார். பிரச்சினை பெரிதானதும் யார் மூலமாகவோ எஸ்.பி.க்கு அதைக் கொடுத்துவிட்டுட்டு தலைமறைவாயிட்டார்'' என்றார் உறுதியான குரலில்.

அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என விசாரித்த போது ""4 பக்கம் கொண்ட அந்தக் கடிதம் தன் அப்பாவுக் கும் தன் அண்ணனுக்கும் தன் காதல் மனைவி திவ்யா வுக்குமாக மூன்று பகுதியாக எழுதப்பட்டிருந்தது. தன் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில், "அப்பா உங்களை விட்டுப்போறேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுதான் இதற்குக் கார ணம். என்னைப் பெற்று வளர்க்க எவ்வளவோ கஷ்டப்பட்டீங்க. ஆனா உங்களை விட்டுப் பிரியவேண்டிய நேரம் வந்துடுச்சி, அடுத்த ஜென் மம்ன்னு ஒண்ணு இருந்தா நீங்களும் அம்மாவும் எனக்கு மகனாவும் மகளாவும் பொறக்கணும்' என்கிற மாதிரி செண்ட்டிமெண்ட்டா எழுதப் பட்டிருந்தது. அண்ணன் பாலாஜிக்கு எழுதிய கடிதத்தில், "இந்த சமு தாயத்தைப் பத்தி அண்ணனாவும் ஃபிரண்டாவும் இருந்து நீ எவ்வளவோ அட்வைஸ் செய்தே. அதை நான் அலட்சியப்படுத்திட்டேன். அதுதான் உங்களை பிரியக் காரணமா ஆய்டிச்சி' என்பது போன்ற வரிகள் எழுதப்பட்டிருக்கு.


திவ்யாவுக்கு எழுதிய கடிதத்தில், "நாம் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். 

ஆனா நாம வேறுவேறு ஜாதிங் கிறதால் பிரிஞ்சி நிக்கிறோம். நீ கோர்ட்டுக்கு வந்தப்ப என்னோடு வந்துடுவேன்னு நினைச்சேன். ஆனா நீ வரலை. இனி நான் இருந்து என்ன பயன்? அடுத்த ஜென்மத்திலாவது நாம் ரெண்டுபேரும் ஒரே ஜாதியில் பொறந்து சேர்ந்துவாழ்வோம்’ என்றெல்லாம் உருக்கமான வரிகள் இடம்பிடித்திருக் கிறது. ஆக தனது காதல் நாடகக் காதல் இல்லைன்னு, தன் உயிரை விட்டு நிரூபிச்சிருக்கான் இளவரசன்''’ என்றார் அந்த காக்கி அதிகாரி.

இந்த சூழலில் தகுதியற்ற டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய் திருப்பதால் இளவரசனின் உடலை மறு போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும்’ என சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். நீதிபதிகள் தனபால், சி.டி.செல்வம் பெஞ்சோ ‘"போஸ்ட்மார்ட்ட வீடியோவை ஜட்ஜ் சேம்பரில் தடயவியல் நிபுணரும் அவர்கள் தரப்பு மருத்துவர்களும் பார்க்கலாம். இதன்பிறகும் சந்தேகம் இருந்தால் போஸ்ட்மார்ட்டம் குறித்து முடிவெடுக்கலாம்' என வழக்கை ஒத்தி வைத்தது.

இளவரசன் உலகுக்கு இன்னும் எவ்வளவோ சொல்ல காத்திருக்கிறான் போல.

-வடிவேல்
அட்டைப் படம் : ஸ்டாலின்



இளவரசன் மரணத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் திவ்யாவிற்கு, உயர்நீதிமன்ற உத்தரவுப் படி மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் தரப்பட்டது. அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் நம் கவனத்துக்கு வர, இது தொடர்பாக திவ்யாவிடமே விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்றோம். 

திவ்யாவின் அம்மா தேன்மொழியோ, ""திவ்யா மனம் குழம்பிப்போய் இருக்கிறாள். அவளிடம் நீங்கள் எதையாவது கேட்கப்போய், அவள் சோகம் அதிகமாகிவிடுமோ என்று பயப்படுகிறேன். ஆரம்பத்தில் இருந்து இந்த விவகாரத்தில் நக்கீரன்  அக்கறையோடு செய்தி வெளியிட்டிருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என்று நக்கீரன் நினைத்ததும் எனக்குத்தெரியும். எனவே திவ்யாவின் மனம் புண்படாதவாறு அவளிடம் பேசுங்கள்'' என்று திவ்யாவை சந்திக்க சம்மதம் கொடுத்தார். 

துயர ஓவியமாக காட்சிதந்த திவ்யாவிடம், "மருத்துவ கவுன்சிலிங்கின் போது, இளவரசன் அவசரப்பட்டிருக்கக் கூடாது. இது உண்மையான காதல்தானே, இன்னும் கொஞ்சகாலம் பொறுத் திருக்கலாம். அதற்குள் எங்க அம்மாவை சமாதானம் செய்திருப்பேன். நானும் வேலைக்கு போயிருப்பேன். அவனும் வேலைக்குப் போயிருப்பான். இதன்பிறகு நாங்கள் எல்லோரையும் புரியவைத்துவிட்டு சேர்ந்திருப் போம் என்று சொன்னீர்களா?' என்றோம். திவ்யாவோ கண்ணீர் வழியும் விழிகளோடு ""ஆமாம்,. அப்படி சொன்னது உண்மைதான்'' என்றார். 

"இதை இளவரசனிடம் சொல்லியிருக்கிறீர்களா?' என்றோம். திவ்யாவோ ""ஆமாங்க. கொஞ்சம் நிலைமை சரியானதும், குடும்பத்தில் எல்லோரையும் சமா தானப்படுத்திட்டு மறுபடி சேர்ந்து வாழலாம்ன்னு சொல்லியிருந்தேன். கோர்ட்டில் கூட, இப்ப அம்மா இருக்கும் சூழலில், அவங்களுக்காகத்தான் இள வரசனோட போகவிரும்பலைன்னு சொன்னேன். ஆனா அவசரப்பட்டு இப்படி போய்சேர்ந்துட்டானே... மனரீதியா என்னை குற்றவாளியாக்கிட்டுப் போய்ட்டானே.. இனி அவங்கிட்ட எப்படி என் காதலையும் அன்பையும் தெரிவிப்பேன்...'' என முகத்தில் அறைந்துகொண்டு அழுதார். அவரை சமாதானப்படுத்தினோம்.

""அப்போதும் ‘நாங்க ஒருத்தர் மேல் ஒருத்தர் உயிரையே வச்சிருந்தோம். எப்படியெல்லாமோ அன்பைப் பரிமாறிக்கிட்டோம். நாங்க எப்படி எப்படியோ வாழனும்ன்னு கனவு கண்டோம். எல்லாம் மணற்கோட்டையா தவிடுபொடியாயிடிச்சி. அவன் கடைசியா எழுதிய கடிதத்தில் கூட அடுத்த ஜென் மத்திலாவது ஒரே சாதியில் பொறந்து நாம சந்தோசமா வாழணும்ன்னு எழுதியிருக்கான் பார்த்தீங்களா? அவன் கடைசி நிமிடத்தில் என் னென்ன நினைச்சானோ.. அய்யோ.. தாங்கலைங்க'' என குமுறிவெடித்தார். அவர் அழுது அடங்கும்வரை காத்திருந்தோம். பின்னர், "இளவரசனின் இறுதிச் சடங்குகளுக்கு நீங்க வரணும்ன்னு அவங்க குடும் பத்தினர் ஆசைப்படுறாங்களே நீங்க போவீங்களா?' என்றோம். நம் முகத்தையே வெறித்துபார்த்தார் திவ்யா. அவரிடமிருந்து கண்ணீரே பதிலாக வழிந்தது. 

அருகில் இருந்த அவரது அம்மா தேன் மொழியோ ""இப்ப இருக்கும் சூழலில் எப்படிங்க போக முடியும்? அங்க யாராவது ஏதாவது சொல்லப் போயி, மறுபடியும் ரெண்டு தரப்புக்கும் இடையே பிரச்சினை வந்துட்டா என்னங்க பண்றது. மனசு கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்றது?'' என்றார். நாம் திவ்யாவிடம் ‘தைரியமா இருங்க’என ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்தோம். அப்போது ""அவன் முகத்தைக்கூட கடைசியாப் பார்க்கமுடி யாமப் போச்சே.. டேய் ஏண்டா இப்படிப் பண்ணினே... எப்படிடா என்னைவிட்டுட்டு உன்னால் போக முடிஞ்சிது?''’என திய்யா பெருங்குரலெடுத்துக் கதறுவது நம் காதில் கேட்டது. மனம் கனத்துப் போக, மெல்ல நடக்க ஆரம்பித்தோம்.

ad

ad