புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் மேனனுக்கு கிடையாது: வாசுதேவ
13வது திருத்தத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் மேனனுக்கு கிடையாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசின் பங்காளிக் கட்சியான, திஸ்ஸ விதாரன குழுவின் பரிந்துரைக்கமையவே இது தொடர்பில் தீர்வுகளைக் காண வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு என்றும் கூறினார்.
இது தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
13ஆவது திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண சபை முறைமையை பாதுகாப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் விவாதித்து தீர்மானம் எடுக்கக் கூடிய சிறந்த இடம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவாகும்.
எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே கட்சி உட்பட கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்துகொள்ள வேண்டும்.
அதைவிடுத்து இதில் கலந்து கொள்ளாமல் தீர்வு வேண்டுமென வலியுறுத்துவதில் பலனில்லை.
பெரும்பான்மையான கடும்போக்குச் சக்திகள் இத் தெரிவுக்குழுவில் இருந்தாலும் தத்தமது கருத்துகளை இங்கு வெளியிட்டு விவாதங்களை நடத்த முடியும்.
அமைச்சர்களான விமல், சம்பிக்க ஆகியோரின் கொள்கைகளை நாம் எதிர்க்கின்றோம்.
அதேவேளை, தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு மாகாண சபை முறைமையை பாதுகாக்க வேண்டுமென எமது நிலைப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்.
அத்தோடு திஸ்ஸ விதாரண குழு பரிந்துரைகளுக்கமையவே தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துவோம்.
13ஆவது திருத்தம் இந்தியாவின் முயற்சியினாலேயே உருவானது. எனவே, அதனை பாதுகாக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கையை இந்தியா முன்வைக்கலாம்.  அதைவிடுத்து 13இல் திருத்தங்களை கொண்டுவர வேண்டாம். அதற்கு இடமளிக்கமாட்டோம் என இந்தியா அதன் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஊடாக எம் மீது அதிகாரம் செலுத்த முடியாது.
திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

ad

ad