மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
-
10 செப்., 2013
விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வட மாகாணத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: ஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
இலங்கையில் இடம்பெறும் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
9 செப்., 2013
மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)