3 மார்., 2018

பிளவுபடுகிறதா தமிழ்த் மக்கள் பேரவை?

தமிழ் மக்­கள் பேர­வை­யைத் தனது தனிக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுக்­கி­றார் என்­கிற அச்­ச­மும், குழப்­ப­மும் அதில் அங்­கம் வகிப்­ப­வர்­க­ளி­டையே தோன்­றி­யுள்­ளது. இந்­தக் குழப்­பங்­கள் கார­ண­மாக தமிழ்க் காங்­கி­ரஸ் மற்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­கள் பேர­வையை விட்டு வில­கப் போகின்­றன என்­றும் பேரவை இரண்­டாக உடை­யப் போகின்­றது என்­றும் கதை­கள் உலா­வத் தொடங்­கி­யுள்­ளன.
தமிழ் மக்­கள் பேர­வை­யைத் தனது தனிக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுக்­கி­றார் என்­கிற அச்­ச­மும், குழப்­ப­மும் அதில் அங்­கம் வகிப்­ப­வர்­க­ளி­டையே தோன்­றி­யுள்­ளது. இந்­தக் குழப்­பங்­கள் கார­ண­மாக தமிழ்க் காங்­கி­ரஸ் மற்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­கள் பேர­வையை விட்டு வில­கப் போகின்­றன என்­றும் பேரவை இரண்­டாக உடை­யப் போகின்­றது என்­றும் கதை­கள் உலா­வத் தொடங்­கி­யுள்­ளன.

ஆனால் அவற்றை சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­கள் எவை­யும் இது­வ­ரை­யில் உறு­திப்­ப­டுத்­த­வில்லை. பேர­வையை எதிர்­கா­லத்­தில் நடத்­திச் செல்­வ­தற்­காக ஒரு செயற்­கு­ழுவை உரு­வாக்­கி­யி­ருப்­ப­து­டன் அதனை அர­சி­யல் நீக்­கம் செய்­தி­ருப்­ப­தாக முத­ல­மைச்­சர் நேற்­று­முன்­தி­னம் அறி­வித்­தார். ஆனால் அந்­தச் செயற்­கு­ழு­விற்­குத் தானே தலை­வர் என்­றும் அறி­வித்­தார்.பேர­வையை உரு­வாக்­கிய பங்­கா­ளி­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்­கா­மல் திடீ­ரென முத­ல­மைச்­சர் இந்த நட­வ­டிக்­கையை எடுத்­தி­ருப்­பது பெரும் புகைச்­ச­லைக் கிளப்­பி­யுள்­ளது என்று அதி­ருப்­தி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தனது இந்­தி­யச் சார்பு நிலைப்­பாட்­டைத் திடீ­ரென வெளிப்­ப­டை­யாக அறி­வித்­தி­ருப்­ப­தும் அதுவே பேர­வை­யின் கொள்­கை­யாள இருக்­க­வேண்­டும் என்­ப­து­போ­லக் கூறி­யி­ருப்­ப­தும் கூடப் பிரச்­சி­னை­யாகி இருக்­கி­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்ள தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சிக்கு இது தர்ம சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பேரவை இந்­திய ஆத­ரவு நிலைப்­பாட்டை எடுத்­தால் அதில் தொடர்ந்­தும் நீடிப்­பது சாத்­தி­ய­மற்­றது என்று காங்­கி­ரஸ் கரு­து­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது. இதனை அடுத்தே பேர­வை­யி­லி­ருந்து காங்­கி­ரஸ் வெளி­யே­றும் என்­கிற கதை­கள் உலா­வத் தொடங்­கி­யுள்­ளன. ஆனால், அத்­த­கைய முடிவு எது­வும் இது­வ­ரை­யில் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

பேர­வை­யின் உரு­வாக்­கத்­தில் பங்­கெ­டுத்த இரு அர­சி­யல் கட்­சி­க­ளான தமிழ்க் காங்­கி­ரஸ் மற்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் ஆகி­ய­வற்­றைப் புற­மொ­துக்கி விட்டு செயற்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டமை ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சித் தலை­மைக்கு கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது.

அத்­தோடு இது­வரை கால­மும் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரா­கவே முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இருந்­தார். ஆனால் நேற்­று­முன்­தி­னம் நடந்த கூட்­டத்­தில் அவ­ரது செயற்­பா­டு­கள் தன்னை மையப்­ப­டுத்­தி­யதே பேரவை என்­ப­தாக அமைந்­தி­ருந்­தது என்று பேரவை உறுப்­பி­னர்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் உணர ஆரம்­பித்­துள்­ள­னர். இது­வும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பல தரப்­பு­க­ளும் சேர்ந்து உழைத்து ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்­கிய பின்­னர் அத­னைத் தனி­யொ­ரு­வர் தன்­னு­டைய நல­னுக்­காக மட்­டும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள நினைப்­பது ஏற்­ப­டு­டை­ய­தல்ல என்று அவர்­கள் குமு­று­கின்­ற­னர்.

இவ்­வா­றான சில பல கார­ணங்­க­ளால் பேர­வைக்­குள் கடும் குழப்­பங்­கள் ஏற்­பட்­டுள்­ளன என்று கூறப்­ப­டு­கின்­றது. எனி­னும் எந்­த­வொரு தரப்­பும் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்­வக் கருத்­துக்­க­ளை­யும் தெரி­யப்­ப­டுத்­த­வில்லை