புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 மார்., 2018

18ஆவது “வீரர்களின் சமர்" சமநிலையில் முடிவு

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொ
ண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 18ஆவது “வீரர்களின் சமர்“ கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வருடாந்த சமர் சமநிலை அடைந்த காரணத்தினால், வீரர்களின் சமர் கிரிக்கெட் தொடர் நடப்பு சம்பியனாக 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை சூடியிருந்த மகாஜனாக் கல்லூரி நீடிக்கின்றது.

விருதுகள்

சிறந்த களத்தடுப்பாளர் – பிரோஷன் (ஸ்கந்தவரோதயா கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் – தங்கராசா தயுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி)

போட்டியின் ஆட்ட நாயகன்–தங்கராசா தயுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – நதீஷன் ஜனுசன் (மகாஜனாக் கல்லூரி)

சிறந்த சகலதுறை வீரர் – மஹேந்திரன் சுஜீபன் (மகாஜனாக் கல்லூரி)

போட்டியின் சுருக்கம்

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 233 (69.1) – பாஸ்கரன் அஜிந்தன் 55, கணேஷமூர்த்தி நிகர்ஜன் 38, தங்கராசா தயுஸ்டன் 70/7(19.1)

மகாஜனாக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 225 (59.3) – நதீஷன் ஜனுசன் 57, தங்கராசா தயுஸ்டன் 29, மஹேந்திரன் சுஜீபன் 28, ஸ்ரீரஞ்சன் டிலுக்ஷன் 39/3(09)

ஸ்கந்தவரோதயா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 134 (60)– கணேஷமூர்த்தி நிகர்ஜன் 34, செல்லத்துரை சோபிதன் 19, மஹேந்திரன் சுஜீபன் 34/5(14)