புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2019

பாலியல் துன்புறுத்தல் - அதிபர், ஆசிரியர்கள் விடுதலை

மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியின் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.
மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியின் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு அந்தப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் பின்னர் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவத்தை வெளியில் கூறவேண்டாம் என்று மிரட்டினர் என்றும் குற்றஞ்சாட்டப்படது.

இந்தச் சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அதிபர், மற்றும் மாணவியை மிரட்டினார் என்று தெரிவிக்கப்பட்ட ஆசிரியர், மற்றும் வகுப்பாசிரியரான ஆசிரியை ஒருவர் பொலிஸாரின் விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் இருவாரங்களில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. இன்போது, பாலியல் துன்புறுத்தலை சம்பவத்தை மூடி மறைத்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட் அந்தப் பாடசாலை அதிபர், மற்றும் மாணவியை வீடு சென்று மிரட்டினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர், மற்றும் வகுப்பாசிரியரான பெண் என மூவரும் குற்றமற்றவரர்கள் என்று கருதி நீதிமன்று விடுவித்தது.

எனினும் வழக்கின் பிரதான எதிரியான பாலியல் துன்புறுத்தல் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ad

ad