புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 ஜூலை, 2019

இரட்டைக் கொலை- கிளிநொச்சியில் பரபரப்பு


கிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் இரத்தக் காயங்களுடன் வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதுடைய விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.