புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஆக., 2019

3 அமைப்புகள் மீதான தடை தொடரும்

அவசரகால சட்டம் நீடிக்கப்படாதது, பயங்கரவாத அமைப்புக்களின் தடைக்கு இடையூறாக அமையாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம் மற்றும் விலயான் அல் செயிலானி போன்ற 3 அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை
அவசரகால சட்டத்தின் கீழ் அல்ல என்றும், இவை 1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 27 ஆவது சரத்தின் கீழாகும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அவசரகால சட்டம் நீடிக்கப்படாதது, பயங்கரவாத அமைப்புக்களின் தடைக்கு இடையூறாக அமையாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம் மற்றும் விலயான் அல் செயிலானி போன்ற 3 அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை அவசரகால சட்டத்தின் கீழ் அல்ல என்றும், இவை 1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 27 ஆவது சரத்தின் கீழாகும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு அமைவாக அவசரகால சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த 3 அமைப்புக்கள் மீதான தடை நீங்குவதாக பரப்பப்படும் வதந்தி அடிப்படை அற்றதாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.